Published:Updated:

பாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா புகைப்படம்... வைரலான போஸ்டர்!

இந்திய பாடகரின் புகைப்பட போஸ்டர் ( ட்விட்டர் )

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா-வின் புகைப்படம் போஸ்டரில் இருப்பதால் அந்த போஸ்டர் இந்தியாவிலும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா புகைப்படம்... வைரலான போஸ்டர்!

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா-வின் புகைப்படம் போஸ்டரில் இருப்பதால் அந்த போஸ்டர் இந்தியாவிலும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Published:Updated:
இந்திய பாடகரின் புகைப்பட போஸ்டர் ( ட்விட்டர் )

பஞ்சாப் மாநில பாடகர் சித்து மூஸ் வாலா என்ற சுப்தீப் சிங் சித்து (28,) கடந்த மே மாதம் 29-ம் தேதி, பஞ்சாப் மாநிலத்திலுள்ள மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் பிப்ரவரியில் மான்சா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இந்தப் படுகொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் கொலைக்கு கேங் வார் காரணமாகச் சொல்லப்பட்டது.

சித்து மூஸ் வாலா
சித்து மூஸ் வாலா

இந்த நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள முல்தான் பகுதியில் அமைந்திருக்கும் பிபி-217 தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான பரப்புரை சுவரொட்டியில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி, முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி மற்றும் மூஸ் வாலாவின் புகைப்படங்களைப் பயன்படுத்தியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. அந்த போஸ்டரில் மூஸ் வாலாவின் பிரபலமான எண்ணைக் குறிக்கும் வகையில் `295’ என்ற எண் பொறிக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மூஸ் வாலா-வின் புகைப்படம் போஸ்டரில் இருப்பதால் அந்த போஸ்டர் இந்தியாவிலும் சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக அவரின் ஆதரவளர்களிடம் கேட்டபோது, “சித்து மூஸ் வாலாவின் புகைப்படத்தால் இந்த போஸ்டர் மிகவும் வைரலாகியிருக்கிறது. அவரின் படத்தை போஸ்டரில் அச்சிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களின் போஸ்டர்கள் எதுவும் இதற்கு முன்பு இவ்வளவு வைரலாகியதில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தியப் பாடகரின் புகைப்பட போஸ்டர்
இந்தியப் பாடகரின் புகைப்பட போஸ்டர்
ட்விட்டர்

மூஸ் வாலா பாக்கிஸ்தானில் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றவர். அவர் இறப்பதற்கு முன்பு, லாகூர், இஸ்லாமாபாத்தில் நேரடி நிகழ்ச்சிகளுடன் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக ரசிகர்களுக்கு உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.