Published:Updated:

அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் முக்கியப் பதவிகளில் 130-க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள்!

ஜோ பைடன் | Joe Biden ( Andrew Harnik )

அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தில் 130-க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் பல்வேறு முக்கியப் பதவிகளில் இருக்கின்றனர்.

அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் முக்கியப் பதவிகளில் 130-க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள்!

அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தில் 130-க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் பல்வேறு முக்கியப் பதவிகளில் இருக்கின்றனர்.

Published:Updated:
ஜோ பைடன் | Joe Biden ( Andrew Harnik )

தற்போது அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் இருந்துவருகிறார். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்துவருகின்றனர். மேலும் 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அந்த நாட்டின் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பு கவனிக்கத்தக்க அளவில் இருக்கிறது.

ஜோ பைடன் - கமலா ஹாரிஸ்
ஜோ பைடன் - கமலா ஹாரிஸ்

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் 130-க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்பு அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப் தன்னுடைய நிர்வாகத்தில் 80 அமெரிக்க வாழ் இந்தியர்களையும், அதற்கு முன்பு இருந்த ஒபாமா தன்னுடைய நிர்வாகத்தில் 60 அமெரிக்க வாழ் இந்தியர்களையும் உயர் பதவிகளில் நியமித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில்தான் அதிகபட்சமாக 130 இந்தியர்கள் தலைமைப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.