Published:Updated:

முடங்கிய அமெரிக்க விமான சேவை: காரணம் ரஷ்யாவா... தொழில்நுட்பக் கோளாறா?

விமான நிலையத்தில் பயணிகள்
News
விமான நிலையத்தில் பயணிகள் ( ட்விட்டர் )

சர்வர் சிக்கல் காரணமாக நேற்று அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடங்கியது.

முடங்கிய அமெரிக்க விமான சேவை: காரணம் ரஷ்யாவா... தொழில்நுட்பக் கோளாறா?

சர்வர் சிக்கல் காரணமாக நேற்று அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடங்கியது.

Published:Updated:
விமான நிலையத்தில் பயணிகள்
News
விமான நிலையத்தில் பயணிகள் ( ட்விட்டர் )

உலகம் முழுவதுமுள்ள விமான நிலையங்களில் விமானப் பணிகளுக்கான அறிவிப்பு அமைப்பில் NOTAM எனும் கட்டுப்பாட்டு அறை இருக்கும். இந்த அறையிலிருந்து அந்தப் பகுதிக்குள் வரும் விமானத்துக்கான ஆணைகள், சிக்னல் தொடர்பான தகவல்கள் வழங்கப்படும். அமெரிக்காவில் இருக்கும் இந்தக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அமெரிக்காவின் அனைத்து விமானங்களும் அந்தந்தப் பகுதியிலிருக்கும் விமான நிலையங்களில் தரையிறங்க உத்தரவிடப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட விமானங்கள்
ரத்து செய்யப்பட்ட விமானங்கள்
ட்விட்டர்

கட்டுப்பாட்டு அறையின் இந்த உத்தரவால் 5000-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நேற்று மாலை 5 மணி வரை குறைந்தபட்சம் 9,207 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் 1,309 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான கண்காணிப்புத் தளமான FlightAware தெரிவித்திருக்கிறது.

இந்தக் குழப்பத்தால் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், அதன் திட்டமிடல் அமைப்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அடுத்த எட்டு நாட்களில் 1500-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்துசெய்திருக்கிறது. விமான சேவைகளில் ஏற்பட்ட இந்தத் திடீர் குழப்பத்தால் அமெரிக்க விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.

விமானம் தாமதம்
விமானம் தாமதம்
ட்விட்டர்

இந்த நிலையில், ரஷ்யா - அமெரிக்காவுக்கிடையே மோதல் போக்கு அதிகரித்துவருவதால், இது சைபர் தாக்குதலாக இருக்கலாம் எனத் தகவல் வெளியானது. இதற்கு முன்னர், ரஷ்யாவிலிருந்த ஐரோப்பிய நாடுகளுக்கு, கடலுக்கு அடியில் ராட்சத குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்பட்டுவந்தது. இந்த ராட்சதக் குழாய் மர்மமான முறையில் தகர்க்கப்பட்டது. இதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுவருகிறது.

எனவே, இதற்கு எதிராக ரஷ்யா நிகழ்த்திய சைபர் தாக்குதலாக இருக்கலாம் என யூகிக்கப்பட்டது. ஆனால், வெள்ளை மாளிகை, உடனடியாக இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "இது சைபர் தாக்குதல் என இதுவரை முடிவுசெய்யப்படவில்லை. ஆய்வாளர்கள் இந்த சிக்கல் தொடர்பாக ஆய்வுசெய்து வருகின்றனர்" என விளக்கமளித்திருக்கிறார். விமான சேவை தொடர்பாக எப்போதும் பதிலளிக்காத வெள்ளை மாளிகை முதன்முதலாக தானே விளக்கமளித்திருப்பது கவனிக்கப்படவேண்டியது.

அமெரிக்க விமானம்
அமெரிக்க விமானம்
ட்விட்டர்

போக்குவரத்துச் செயலர் பீட் புட்டிகீக், "இந்த சிக்கலுக்கான மூலக் காரணங்களைத் கண்டுபிடிப்பதற்கும், அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கும் FAA முயன்றுவருகிறது. மேலும், இது இந்தியாவை எந்த விதத்திலும் பாதிக்காது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இயக்கப்படும் விமான சேவைகளிலும் பாதிப்பு இல்லை. அமெரிக்க விமான சேவை விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும்" என்று தெரிவித்திருக்கிறார்.