Published:Updated:

பாலஸ்தீனம்: அலுவலகத்தில் சடலமாக மீட்கப்பட்ட இந்தியத் தூதர் - தீவிர விசாரணையில் அதிகாரிகள்!

பாலஸ்தீனத்துக்கான இந்தியத் தூதர் முகுல் ஆர்யா

பாலஸ்தீனத்துக்கான இந்தியத் தூதர் முகுல் ஆர்யா, கடந்த ஞாயிற்றுக்கிழமை ரமல்லாவிலுள்ள இந்தியத் தூதரக அலுவலகத்திலேயே இறந்திருக்கிறார்.

பாலஸ்தீனம்: அலுவலகத்தில் சடலமாக மீட்கப்பட்ட இந்தியத் தூதர் - தீவிர விசாரணையில் அதிகாரிகள்!

பாலஸ்தீனத்துக்கான இந்தியத் தூதர் முகுல் ஆர்யா, கடந்த ஞாயிற்றுக்கிழமை ரமல்லாவிலுள்ள இந்தியத் தூதரக அலுவலகத்திலேயே இறந்திருக்கிறார்.

Published:Updated:
பாலஸ்தீனத்துக்கான இந்தியத் தூதர் முகுல் ஆர்யா

பாலஸ்தீனத்துக்கான இந்தியத் தூதர் முகுல் ஆர்யா, கடந்த ஞாயிற்றுக்கிழமை ரமல்லாவிலுள்ள இந்தியத் தூதரக அலுவலகத்திலேயே இறந்திருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விவரம் ஏதும் வெளியாகாத நிலையில், முகுல் ஆர்யா மரணம் குறித்து விசாரணை நடத்திவருவதாக, பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்துத் தகவல் தெரிவித்த பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம், ``முகுல் ஆர்யாவின் உடலை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான செயல்பாடுகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருக்கிறோம். முகுல் ஆர்யாவின் மரணம் குறித்து விசாரிக்க சுகாதாரம் மற்றும் தடயவியல் மருத்துவ அமைச்சகம், காவல்துறை, பொது அதிகாரிகளுக்குப் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் பிரதமர் முகமது ஷ்டேயே ஆகியோர் வலியுறுத்தியிருக்கின்றனர்" என்று கூறியுள்ளது.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

இந்தச் செய்தி அறிந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ``பாலஸ்தீனத்தில் இந்தியப் பிரதிநிதி காலமானதை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். அவர் ஒரு திறமையான அதிகாரியாக இருந்தார்" என்று ட்வீட் செய்திருக்கிறார்.

முகுல் ஆர்யா 2008-ம் ஆண்டு முதல் இந்திய வெளியுறவுத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றிவந்துள்ளார். மேலும் இவர், பாரீஸிலுள்ள யுனெஸ்கோவில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும், காபூல் மற்றும் மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகங்களில் அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism