Published:Updated:

இஸ்ரேல்: புதிய பிரதமரானார் நஃப்தாலி பென்னட்! -12 வருட நெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்தது எப்படி?

நஃப்தாலி பென்னட்
நஃப்தாலி பென்னட்

இஸ்ரேலில் 12 ஆண்டுக்காலமாக நடந்துவந்த நெதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வந்து, தற்போது அந்நாட்டின் புதிய பிரதமராக நஃப்தாலி பென்னட் பதவியேற்றுள்ளார். அவருக்கு இந்தியப் பிரதமர் மோடி உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற பிரதமருக்கான தேர்தலில் லிக்குட் (Likud) கட்சியைச் சேர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றினார். அன்று முதல் இந்த ஆண்டு வரை சுமார் 12 ஆண்டுக்கால ஆட்சியை இஸ்ரேலில் நடத்திவந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில்தான் இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அதேபோல் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்து அடங்கின. கடந்த நான்கு தேர்தல்களிலும் எதிர்க்கட்சியினருக்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால், பெஞ்சமின் நெதன்யாகுவே ஆட்சியைத் தொடர்ந்துவந்தார்.

நஃப்தாலி பென்னட்
நஃப்தாலி பென்னட்

இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மார்ச் மாதம், 23-ம் தேதி நடைபெற்ற பிரதமருக்கான தேர்தலில், மொத்தமுள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி சுமார் 30 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானபோதும், அதன் கூட்டணில் கட்சிகளால் எதிர்பார்த்த அளவுக்கு இடங்களைக் கைப்பற்ற இயலயவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி, அரசை அமைக்க முடியாமல் திணறியது, ‘இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார்?!’ என்ற கேள்விக்கு அதிகாரபூர்வ பதில் அளிக்கப்படமால் இழுபறி நீடித்ததுவந்தது.

தேர்தலில் கூட்டணியாக இடம்பெற்றிருந்த யமினா, யேஷ் அதிட், காஹோல் லாவன்- புளூ & ஒயிட் உள்ளிட்ட எட்டு எதிர்க்கட்சியினர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டனர். ஆட்சியைப் பிடிப்பதற்கு பெரும்பான்மையான வாக்குகள் தேவைப்பட்ட பட்சத்தில், அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்தனர். இறுதியில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களைத் தன்வசம் வைத்திருந்ததால், பன்னிரண்டு ஆண்டுக்காலமாக நடைபெற்றுவந்த பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சி கைவிட்டுப்போனது.

இதன் அடிப்படையில், கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் எட்டு கட்சிகளின் பிரதமர் வேட்பாளர்கள் சுழற்சிமுறையில் பிரதமராக பதவிவகிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் முதலாவதாக யமினா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 49 வயதான நஃப்தாலி பென்னட் நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார். யமினா கட்சி மொத்தம் ஏழு இடங்களில் வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி
வெற்றி

தீவிர வலதுசாரிய செயற்பாட்டாளரான நஃப்தாலி பென்னட், இஸ்ரேல் நாட்டின் பிரபல தொழிலதிபரும், தொழிநுட்ப வல்லுநரும், நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும் ஆவார். புதிதாகப் பொறுபேற்றுள்ள பிரதமருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

புதிதாக ஆட்சியைத்துள்ள கூட்டணி அரசில், அரபு இஸ்லாமிய கட்சியும் இடம்பெற்றிருப்பதால் இஸ்ரேலில் பல ஆண்டுகளாக நீடித்துவரும் இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்துக்கு முடிவு எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இஸ்ரேல் - இந்தியா இடையில் கச்சா எண்ணெய் வணிகம், ராணுவ ஆயுதங்கள் உட்பட அனைத்து விஷயங்களிலும் நல்லுறவு பேணப்பட்டுவந்த நிலையில், புதிய அரசின் செயல்பாடுகள் இந்தியாவில் எவ்வாறு இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இஸ்ரேல்-பாலஸ்தீன போர்
இஸ்ரேல்-பாலஸ்தீன போர்
AP

பதவியேற்பு விழாவில் பேசிய புதிய பிரதமர் நஃப்தாலி பென்னட், “இஸ்ரேலின் இறையாண்மைக்கு எந்தவொரு தீங்கும் விளையாத வண்ணம் கடினமான கட்டுப்பாடுகளுடன், பொறுப்புகளை உணர்ந்து சிறந்த ஆட்சியை இந்தப் புதிய கூட்டணி அரசானது செயல்படுத்தும். அதேபோல், இஸ்ரேலில் முதன்முறையாக அரபு இஸ்லாமியக் கட்சி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளதால், அரபு இஸ்லாமிய சமுதாயத்தினருக்கான மேம்பட்ட திட்டங்களைச் செயல்படுத்த அதிகப்படியான நிதியை அரசு ஒதுக்கி திட்டங்களைச் செயல்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: ஓயாத போர் மேகம்... 31 குழந்தைகள் உட்பட 119 பேர் உயிரிழந்த சோகம்!
அடுத்த கட்டுரைக்கு