Published:Updated:

`என் தீக்காயங்களுக்கு 50 வருட சிகிச்சை முடிந்தது!’ - உலகை உலுக்கிய 9 வயது வியட்நாம் சிறுமி இன்று!

Napalm girl ( twitter )

விமானத்தில் இருந்து வெடிகுண்டுகள் விழுந்து கிராமமே எரிந்து கொண்டிருந்தது. ``Too hot! Too hot!'' என கத்தியபடியே ஓடினேன். உடல் முழுவதும் தீக்காயங்கள் உண்டாயின. அச்சமயத்தில் என் மனதில் எனக்கு தீக்காயங்கள ஏற்பட்டுள்ளது.

`என் தீக்காயங்களுக்கு 50 வருட சிகிச்சை முடிந்தது!’ - உலகை உலுக்கிய 9 வயது வியட்நாம் சிறுமி இன்று!

விமானத்தில் இருந்து வெடிகுண்டுகள் விழுந்து கிராமமே எரிந்து கொண்டிருந்தது. ``Too hot! Too hot!'' என கத்தியபடியே ஓடினேன். உடல் முழுவதும் தீக்காயங்கள் உண்டாயின. அச்சமயத்தில் என் மனதில் எனக்கு தீக்காயங்கள ஏற்பட்டுள்ளது.

Published:Updated:
Napalm girl ( twitter )

போரின் கோர முகங்களை, ஒரே ஒரு புகைப்படம் நமக்கு விளக்கி விடும். போரே ஓய்ந்தாலும், அந்தப் புகைப்படங்களும் அவற்றில் இடம்பெற்ற கதாபாத்திரங்களும், போர் குறித்த அபாய எச்சரிக்கையை நமக்கு ஒலித்துக்கொண்டே இருக்கும். அப்படி அனைவரின் மனங்களையும் இன்றளவிலும் உலுக்கிக் கொண்டிருப்பதுதான், ஒன்பது வயது வியட்நாம் சிறுமி, நிர்வாணமாக அழுதுகொண்டே ஓடி வரும் புகைப்படம்.

Napalm girl
Napalm girl
twitter

சுமார் 50 வருடங்களுக்கு முன்பு, 1972-ம் ஆண்டில், வியட்நாம் போரின்போது, அமெரிக்க ஜெட் விமானம் `நேபாம் வெடிபொருளை' (Nepalm bomb) வீசியது. அதில் தப்பிப் பிழைத்த சிறுமி ஒருவர், பற்றி எரியும் தன் உடையை வீசியபடி அழுது கொண்டே ஓடி வரும் காட்சியை, நிக் வுட் எனும் போட்டோகிராபர் படம் பிடித்தார்.

அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்ற சிறுமிக்கு தற்போது 59 வயதாகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`நேபாம் பெண்' என அனைவராலும் அறியப்படும் பான் தி கிம் பூஃக், மூன்றாம் நிலை தீக்காயங்களோடு போரில் இருந்து தப்பிப் பிழைத்தார். ஒரு வருடம் வரை மருத்துவமனை சிகிச்சையில் இருந்த இவருக்கு, அதன் பிறகு 17 அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

வியட்நாமில் இருந்து தன் கணவருடன் 1992-ம் ஆண்டில் கனடாவில் தஞ்சம் புகுந்தார். 2015-ல் அமெரிக்காவில் இருக்கும் மருத்துவர் Jill Zwaibel, இவரின் கதையைக் கேட்டு இலவசமாக சிகிச்சை செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். எந்த நாட்டால் இத்தனை காயங்களைத் தாங்கிக்கொண்டாரோ, அந்த நாட்டிலேயே இவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது.

Napalm girl
Napalm girl
twitter

இச்செய்தியைக் கேட்டு அந்த மருத்துவமனைக்கு விரைந்த நிக் வுட், சிகிச்சையில் இருக்கும் நேபாம் பெண்ணை மீண்டும் புகைப்படம் எடுத்தார். ஆனால், இந்த முறை நேபாம் பெண்ணின் முகத்தில் அழுகை அல்ல... சிரிப்பு இருந்தது.

``சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தபோது, வியட்நாம் வீரர்கள் எங்களை ஓடும்படி வலியுறுத்தினார்கள். அப்போது விமானத்தில் இருந்து வெடிகுண்டுகள் விழுந்து கிராமமே எரிந்து கொண்டிருந்தது. ``Too hot! Too hot!'' என கத்தியபடியே ஓடினேன். என்னுடைய துணிகள் எரிந்து போயின.

தீக்காயத்தால் ஏற்பட்ட பாதிப்பு
தீக்காயத்தால் ஏற்பட்ட பாதிப்பு
twitter

உடல் முழுவதும் தீக்காயங்கள் உண்டாயின. அச்சமயத்தில் என் மனதில் `எனக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. நான் அசிங்கமாக மாறிவிடுவேன். மக்கள் என்னை வேறுவிதமாகப் பார்ப்பார்கள்' என்று தோன்றியது.

50 வருடங்கள் கழித்து, பலகட்ட சிகிச்சைகளை எடுத்துக் கொண்டபின், இனிமேல் நான் போரினால் பாதிக்கப்பட்டவள் அல்ல, நேபாம் பெண் அல்ல. இப்போது நான் ஒரு தோழி, உதவியாளர், பாட்டி... உயிர்பிழைத்தவளாக இப்போது நான் சமாதானத்துக்கு அழைப்பு விடுக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார் பான் தி கிம் பூஃக்.