Published:Updated:

இலங்கை: நிபந்தனை விதித்த சஜித் பிரேமதாசா... புதிய பிரதமரானார் ரணில் விக்கிரமசிங்கே - நடந்தது என்ன?

ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாகப் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியிருந்தார்.

இலங்கை: நிபந்தனை விதித்த சஜித் பிரேமதாசா... புதிய பிரதமரானார் ரணில் விக்கிரமசிங்கே - நடந்தது என்ன?

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாகப் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியிருந்தார்.

Published:Updated:
ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டு மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று போராட்டம் வலுப்பெற்றது. இந்த நிலையில் தான் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இருந்தபோதிலும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகவேண்டும் என்று போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனிடையே போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை
கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை

போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், அந்த பகுதியில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில், அரசு ஆதரவாளர்கள் பலரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ஆளும்கட்சியைச் சேர்ந்த எம்.பி அமரகீர்த்தி அத்துகொரலா தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியானது. அரசு வாகனங்கள் முதல் ஆளும்கட்சியைச் சேர்ந்த பலரின் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் மிகவும் பதற்றமான நிலை ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இலங்கையில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த ராணுவத்தினர் இறக்கப்பட்டனர். மக்களின் பாதுகாப்புக்காகத் தான் ராணுவம் இறக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நாட்டு மக்களிடையே அதிபர் கோத்தபய ராஜபக்சே உரையாற்றியிருந்தார். அப்போது பேசிய அவர், `நாடாளுமன்றத்துக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்க வழிவகை செய்யும் 19-வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்தவும், அதிபரின் அதிகாரத்தைக் குறைத்துக்கொள்வது தொடர்பாகவும் புதிதாக அமையவுள்ள அரசுடன் சேர்ந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் பேசினார்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே
அதிபர் கோத்தபய ராஜபக்சே

தொடர்ந்து பேசியவர், ``நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழலைக் கட்டுப்படுத்த நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறக்கூடிய ஒரு பிரதமரையும், அமைச்சரவையையும் நியமிப்பேன். புதிய பிரதமர் நியமனம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த வாரத்துக்குள் புதிய பிரதமர் தேர்வுசெய்யப்படுவார். அவருடன் புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்கும். இலங்கை மக்களின் நம்பிக்கையை விரைவில் மீட்டெடுப்போம். நாட்டின் நலன் கருதி பொதுமக்கள் போராட்டங்களைக் கைவிட வேண்டும். மக்கள் அமைதி பாதைக்குத் திரும்ப வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சூழலில் தான், அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில், இடைக்கால நடவடிக்கைக்கக ரணில் விக்கிரமசிங்கேவை பிரதமராகப் பதவியேற்கும்படி அதிபர் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல, இலங்கையின் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, அதிபருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

President Gotabaya Rajapaksa, Ranil Wickramasinghe
President Gotabaya Rajapaksa, Ranil Wickramasinghe
Twitter

அந்த கடிதத்தில், ``இலங்கையின் இடைக்கால அரசாங்கத்தையும், பிரதமர் பதவியையும் ஏற்று நடத்தத் தயார்” என்று கூறியிருந்தார். அதேபோல, அவர் ஆட்சி பொறுப்பேற்க, குறுகிய காலத்துக்கு அதிபர் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு நிபந்தனைகளும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதனிடையே இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மாலை பதவி ஏற்றார். நாளை புதிய அமைச்சரவை பதவியேற்கும் எனக் கூறப்படுகிறது.

இலங்கையில் நிகழும் பல்வேறு போராட்டங்கள், குழப்பங்களுக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்கே பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டிருக்கிறார். புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் கலந்தாலோசனை செய்து, அரசியலமைப்பின் திருத்தச் சட்டம் குறித்துப் பேசி முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism