Published:Updated:

நியூயார்க் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து... 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்த சோகம்!

நியூயார்க் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து
News
நியூயார்க் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

`இந்தத் தீ விபத்து மிகவும் கொடூரமானது’ என்று மேயர் எரிக் ஆடம் கூறியுள்ளார். `ஒவ்வொரு தளத்திலும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டுக் கொடுத்துள்ளனர்’ என்று ஆணையர் கூறினார்.

நியூயார்க் நகரிலுள்ள பிரான்க்ஸ் (Bronx) என்ற பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பழுதான மின்சார ஹீட்டர்( Electric Space Heater) ஏற்படுத்திய தீ விபத்தில் ஒன்பது குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மின்சாரம் மூலம் ஏற்பட்ட தீ சட்டென்று இரண்டாம், மூன்றாம் தளங்களுக்குப் பரவியது என்று FDNY ( Fire Department of New York) ஆணையர் டேனியல் தெரிவித்தார்.

நியூயார்க் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து
நியூயார்க் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து
JEENAH MOON

இந்தத் தீ விபத்தால் கரும்புகை குடியிருப்பில் ஏற்பட்டு குடியிருப்பின் ஜன்னல்கள் வழியே வெளிவந்தது. இந்தத் தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே 200-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட அந்தக் குடியிருப்பில் வசிக்கும் ஒருவர், ``அடிக்கடி தவறான எச்சரிக்கை (False Alarm) வந்ததால், இந்த முறையும் அப்படி இருக்கும் என்று எண்ணி விட்டுவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மேயர் எரிக் ஆடமின் மூத்த ஆலோசகர் ஸ்டீபன் ரிங்கேல், இறப்பு எண்ணிக்கையை உறுதி செய்தார். தீ விபத்தால் உயிரிழந்த குழந்தைகள் 16 மற்றும் அதற்குக் குறைவான வயதுடையவர்கள் என்றும், பெரியவர்கள் 13 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் ரிங்கேல் கூறினார்.

நியூயார்க் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து
நியூயார்க் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து
JEENAH MOON

மேலும் 60-க்கும் மேற்பட்டோர் இந்தத் தீ விபத்தால் காயமடைந்திருப்பதாகவும், மேலும் பலர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தீயணைப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.

`இந்தத் தீவிபத்து மிகவும் கொடூரமானது’ என்று மேயர் எரிக் ஆடம் கூறியிருக்கிறார். ஒவ்வொரு தளத்திலும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டுக் கொடுத்துள்ளனர் என்று ஆணையர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குடியிருப்பின் கதவுகள் திறந்திருந்த நிலையில், அந்தத் தீ வேகமாக குடியிருப்பின் மேல் நோக்கிப் புகையாகப் பரவியிருக்கிறது என்று தீயணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர். இந்தத் தீ விபத்து சந்தேகத்துக்குரியதாக இல்லையென்றாலும், இந்தத் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளனர்.

நியூயார்க் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து
நியூயார்க் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து
Yuki IWAMURA

பிலடெல்பியாவில் (Philadelphia) நடந்த தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ள சில தினங்களில், நியூயார்க்கில் மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.