அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் தொழில் நடைமுறைகள் ரீதியான ஒரு வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இந்த விசாரணை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சரிபார்ப்பதற்காக நியூயார்க் நீதிமன்றத்தில் மார்ச் 3 -ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், காலம் கடந்த பின்பும் ட்ரம்ப் தரப்பு ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை.

ஆனாலும் நீதிமன்றம் மற்றொரு வாய்ப்பாக மார்ச் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் தரப்பினர் எந்த ஆவணத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. இதனால், அவர் நீதிமன்றத்தை அவமதித்ததாக நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், நீதிமன்றம் உத்தரவிட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் வரை ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த தீர்ப்பு தொடர்பாக அரசு வழக்கறிஞர், ``நீதிமன்றம் அவரை தண்டிப்பதற்காக இந்த உத்தரவு அளிக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவே விதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என டொனால்ட் ட்ரம்ப் தரப்பு தெரிவித்துள்ளது.