Published:Updated:

`லாக்டெளனுக்கு முந்தைய இரவு; துப்பாக்கிச்சூடு’ - வியன்னாவை அதிரவைத்த தாக்குதல் சம்பவம்

வியன்னா
வியன்னா

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில், லாக்டெளன் கட்டுப்பாடுகளுக்கு முந்தைய இரவை மக்கள் உணவகங்களிலும் பார்களிலும் கழித்துக்கொண்டிருந்தனர்.

ஆஸ்திரியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் கடுமையாக உயரத் தொடங்கியிருக்கிறது. மக்களிடையே கொரோனா அச்சம் மேலும் அதிகரிக்கத் தொடங்கயிருக்கும் நிலையில், `தேசிய அளவிலான கட்டுப்பாடுகள் நவம்பர் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும்’ என்றும், `இம்மாத இறுதிவரை அங்கு கட்டுப்பாடுகள் தொடரும்’ என்றும் அந்நாட்டு அரசு அறிவித்தது.

வியன்னா
வியன்னா

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில், லாக்டெளன் கட்டுப்பாடுகளுக்கு முந்தைய இரவை மக்கள் உணவகங்களிலும் பார்களிலும் கழித்துக்கொண்டிருந்தனர். இந்தச் சூழலில் வியன்னாவில், வெவ்வேறு இடங்கள் நடைபெற்ற துப்பாக்குச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

குறைந்தது ஆறு இடங்களிலிருந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். வியன்னாவின் தேவாலயம் அருகே இந்தத் தாக்குதல் நடைபெற்றபோதும், தேவாலயத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

வியன்னா
வியன்னா

துப்பாக்கி ஏந்திய நபர்கள் கண்மூடித்தனமாக மக்கள் மீது பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதனால் பலர் காயமடைந்தனர் என்றும் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் போலீஸார் பதில் தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலில், தீவிரவாதி ஒருவர் உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்னும் ஒரு தீவிரவாதி மக்களுடன் மக்களாக இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. வியன்னாவின் சில பகுதிகள் முழுமையாக சீல் வைக்கப்பட்டு விசாரணையும் தேடுதலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

`2015 கலகம்... பிரான்ஸ் முதல் சவுதி அரேபியா வரை’ - தொடரும் பதற்றம்!

ஆஸ்திரியா ஆளுநர் செபாஸ்டியன் குர்ஸ், இந்தத் தாக்குதல் சம்பவத்தை, `வெறுப்பூட்டும் தீவிரவாதத் தாக்குதல்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வியன்னா
வியன்னா

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ``பிரான்ஸில் சமீபத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு வியன்னாவிலும் வெறுப்புணர்வு தீவிரவாதம் தலைதூக்கியிருக்கிறது. இது நமது ஐரோப்பா. நேற்று எங்களைத் தாக்கினார்கள்; இன்று எங்களுடைய நண்பரைத் தாக்கியிருக்கிறார்கள். இதைத் தொடரவிடக் கூடாது. தீவிரவாதத்தின் மிரட்டலுக்கு ஐரோப்பா பணிந்துவிடக் கூடாது" என்று தெரிவித்தார்.

`தீவிரவாதத்துக்கு எதிரான போரிலிருந்து பிரான்ஸ் ஒருபோதும் பின்வாங்காது!’- இம்மானுவேல் திட்டவட்டம்
அடுத்த கட்டுரைக்கு