Published:Updated:

பொருளாதார நெருக்கடி; ``சீனாவுடன் இலங்கை அரசு பேசவேண்டும்!" - முன்னாள் பிரதமர் ஆலோசனை

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங் ( ட்விட்டர் )

``2019-ம் ஆண்டு நான் பிரதமராக இருந்தபோது நாட்டின் பொருளாதார மூலதனம் ஆரோக்கியமான நிலையில் இருந்தது." - இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்

பொருளாதார நெருக்கடி; ``சீனாவுடன் இலங்கை அரசு பேசவேண்டும்!" - முன்னாள் பிரதமர் ஆலோசனை

``2019-ம் ஆண்டு நான் பிரதமராக இருந்தபோது நாட்டின் பொருளாதார மூலதனம் ஆரோக்கியமான நிலையில் இருந்தது." - இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்

Published:Updated:
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங் ( ட்விட்டர் )

``நிதிநிலையைக் கையாள்வதில் தற்போதைய இலங்கை அரசு திறமையின்மையால், நாட்டைக் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்க வைத்திருக்கிறது" எனக் குற்றம் சாட்டியுள்ளார் இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்.

கடந்த சில வாரங்களாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. மக்கள் சாலைகளில் இறங்கிப் போராடி வருகிறார்கள். இந்த நிலையில், இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங் பிரபல தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``2019-ம் ஆண்டு நான் பிரதமராக இருந்தபோது, நாட்டின் பொருளாதார மூலதனம் ஆரோக்கியமான நிலையில் இருந்தது. 

மகிந்த ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், தற்போதைய அரசின் இயலாமையால் மக்கள் வீதிக்கு வந்து விட்டார்கள். மோசமான பொருளாதார நிலை அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது. இது நாட்டிற்குப் பேரழிவு. இரண்டு ஆண்டுகளாக இந்த அரசு பொருளாதார சிக்கல்களின்  அனைத்து அறிகுறிகளையும் புறக்கணித்துள்ளது. நான் பிரதமராக இருந்தபோது இலங்கையில் சீனா அதிகமாக முதலீடு செய்திருந்தது. தற்போது, அது பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், சீனா இலங்கையில் இன்னும் சில திட்டங்களை நிறைவேற்றவுள்ளது. 

ரணில் விக்ரமசிங்
ரணில் விக்ரமசிங்

ஆனால் இலங்கை எதிர்பார்த்த அளவு அதிக முதலீடுகள் வரவில்லை. மேலும், சீனாவுக்குத் திரும்பச் செலுத்த வேண்டிய கடனை மறுபரிசீலனை செய்வது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து, சீன அரசுடன் இலங்கை பேச வேண்டும். அப்போதுதான் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு தீர்வுக்கான முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism