Published:Updated:

``இலங்கையைவிட்டு வெளியேறும் எண்ணம் இல்லை; குற்றச்சாட்டுகளை சந்திக்க தயார்” - நமல் ராஜபக்சே

நமல் ராஜபக்சே ( ட்விட்டர் )

``இலங்கையைவிட்டு வெளியேறும் எண்ணம் இல்லை" என மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

``இலங்கையைவிட்டு வெளியேறும் எண்ணம் இல்லை; குற்றச்சாட்டுகளை சந்திக்க தயார்” - நமல் ராஜபக்சே

``இலங்கையைவிட்டு வெளியேறும் எண்ணம் இல்லை" என மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Published:Updated:
நமல் ராஜபக்சே ( ட்விட்டர் )

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகவேண்டும் எனக்கோரி கடந்த சில நாள்களாக அமைதியான வழியில் போராடிவந்த மக்கள் மீது ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கடுமையான தாகுதல்களை மேற்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ராஜபக்சேவின் வீட்டை தீயிட்டு எரித்தனர். இதையொட்டி, அலரி மாளிகையிலிருந்து மகிந்த ராஜபக்சேவும், அவரின் குடும்பத்தினரும் ஹெலிகாப்டரில் திரிகோணமலை கடற்படைத் தளத்துக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இன்று இலங்கையின் புதிய பிரதமராக ரணில் பதவியேற்ற போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளதாவது, ``கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன். எனது தந்தை மகிந்த ராஜபக்சேவுக்கோ , எனக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை. அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாங்கள் சந்திக்க தயார்'' என பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism