Published:Updated:

``எந்த வல்லரசும் அவர்களுக்கு ஆணையிட முடியாது; இந்தியா ஒரு பெருமைமிக்க நாடு!" - இம்ரான் கான் உரை

இம்ரான் கான்

``இன்றுவரை எனது கொள்கைகள் மாறவில்லை. நான் நேர்மை, நீதி மற்றும் பொது நலம் ஆகிய கொள்கைகளின் படி நடந்துள்ளேன்" - இம்ரான் கான்

``எந்த வல்லரசும் அவர்களுக்கு ஆணையிட முடியாது; இந்தியா ஒரு பெருமைமிக்க நாடு!" - இம்ரான் கான் உரை

``இன்றுவரை எனது கொள்கைகள் மாறவில்லை. நான் நேர்மை, நீதி மற்றும் பொது நலம் ஆகிய கொள்கைகளின் படி நடந்துள்ளேன்" - இம்ரான் கான்

Published:Updated:
இம்ரான் கான்

பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் இம்ரான்கான் அரசுக்கு எதிராகக் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அந்நாட்டு நாடாளுமன்ற துணைச் சபாநாயகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தார். ஆனால், அந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ரத்து செய்வது சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறி எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இம்ரான்கான் அரசு சனிக்கிழமை (இன்று) நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ``இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் தொடங்கிய கட்சி தெஹ்ரீக்-இ-இன்சாஃப். அன்றிலிருந்து இன்றுவரை எனது கொள்கைகள் மாறவில்லை. நான் நேர்மை, நீதி மற்றும் பொது நலம் ஆகிய கொள்கைகளின் படி நடந்துள்ளேன்.

பாகிஸ்தான் தேசியக்கொடி
பாகிஸ்தான் தேசியக்கொடி

உச்சநீதிமன்ற தீர்ப்பால் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனால், நான் பாகிஸ்தான் நீதிமன்றங்களை மதிக்கிறேன். துணைச் சபாநாயகர் ஐந்தாவது பிரிவின் கீழ் தேசிய சட்ட மன்றத்தைக் கலைத்தார். அரசைக் கவிழ்க்க அந்நிய நாடு ஒன்று சதி செய்கிறது என்ற மிகக் கடுமையான குற்றச்சாட்டைக் குறைந்தபட்சம் உச்ச நீதிமன்றமாவது அழைத்து விசாரித்திருக்க வேண்டும். அந்த ஆவணத்தைப் பார்த்திருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசியல்வாதிகளின் மனசாட்சி வெளிப்படையாக விலைக்கு வாங்கப்படுகிறது, உலகின் எந்த ஜனநாயகத்தில் இது நடக்கிறது? இதையும் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்த்தோம். எந்த மேற்கத்திய நாட்டிலும் யாரும் யாரையும் வாங்க நினைக்க மாட்டார்கள் யாரும் தன்னை விற்கமாட்டார்கள்.

பாகிஸ்தான் பாராளுமன்றம்
பாகிஸ்தான் பாராளுமன்றம்

நமது நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக எனது நாட்டு மக்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். `நாம் இப்படியே இருக்க வேண்டும் என்றால் நாம் ஏன் நமது சுதந்திரத்தைக் கொண்டாடுகிறோம்?’ எனப் பாகிஸ்தான் மக்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு கட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்னொரு கட்சிக்குப் போவது அனைவருக்கும் தெரியும். ஊடகங்களுக்கும் எல்லாம் தெரியும். இந்தியாவை மற்றவர்களைவிட எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு அங்கே இருக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் மற்றும் காஷ்மீர் விவகாரம் காரணமாகத்தான் எங்கள் உறவுகள் மோசமடைந்தது. அதற்கு நான் வருந்துகிறேன்.

- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் -  மோடி
- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் - மோடி

பாகிஸ்தான், ரஷ்யாவுக்கு எதிராக பேச வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நமக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால் இதே அழுத்தத்தை இந்தியாவுக்கு கொடுக்க அவர்களுக்கு துணிவில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்தே சுதந்திரம் பெற்றது. ஆனால் மேற்கத்திய நாடுகளால் பாகிஸ்தான் ஒரு டிஷ்யூ பேப்பரை போல தூக்கி எறியப்படுகிறது. இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் சுயமரியாதையை கற்றுக்கொள்ள வேண்டும்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தலையிட எந்த ஒரு வெளிநாட்டுச் சக்திக்கும் தைரியம் இல்லை. இந்தியா ஒரு பெருமைமிக்க நாடு. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சுதந்திரமானது மற்றும் ஒவ்வொரு கடும் சூழலையும் கடந்து ரஷ்ய அரசிடமிருந்து எண்ணெய் வாங்குகிறது. இந்தியாவைப் பற்றி இப்படிப் பேச யாருக்கும் தைரியமில்லை. எந்தவொரு வல்லரசும் இந்தியாவுக்கு ஆணைகளை இட முடியாது" என உரையாற்றினார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இம்ரான் கானின் உரைக்குப் பின்பு "தற்போது அரசே நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கிறது" என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism