Published:Updated:

``ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ரஷ்யாவுக்கு இடமளிக்கக் கூடாது"- உக்ரைன் அமைச்சர்

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா ( ட்விட்டர் )

உக்ரைனின் புச்சா நகரில், உக்ரேனிய மக்கள்மீது ரஷ்யப் படையினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ``ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ரஷ்யாவுக்கு இடமளிக்கக் கூடாது" என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா ட்வீட் செய்துள்ளார்.

ரஷ்யப் படைக்கும், உக்ரேனிய படைக்கும் இடையே 41-வது நாளாக உக்ரைனில் போர் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. போர் தொடங்கியதிலிருந்தே ரஷ்யப் படையினரால், உக்ரேனிய ராணுவ வீரர்கள் உட்பட உக்ரைன் குடிமக்களும் உயிரிழந்துவருகின்றனர். இந்த நிலையில் உக்ரைனின் புச்சா நகரப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, கைகள் கட்டப்பட்டு, தலையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்தபடி உக்ரேனிய மக்கள் சிலர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யப் படைகள்தான் இத்தகைய கொடூர சம்பவத்துக்குக் காரணம் என்று ரஷ்யா மீது உக்ரைன் குற்றம்சாட்டிவருகிறது. ஆனால் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகமோ இதை முற்றிலுமாக மறுத்துவருகிறது.

உக்ரைனின் புச்சா நகரில் உக்ரேனியர்கள் படுகொலை
உக்ரைனின் புச்சா நகரில் உக்ரேனியர்கள் படுகொலை

இந்த நிலையில், ``ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ரஷ்யாவுக்கு இடமளிக்கக் கூடாது" என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா (Dmytro Kuleba) இன்று ட்வீட் செய்துள்ளார். ஐ.நா பொதுச்செயலாளருடன் பேசியதாகக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள டிமிட்ரோ குலேபா, ``தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் புச்சா படுகொலை தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும், ரஷ்யப் போர்க் குற்றவாளிகளைக் கணக்கில்வைப்பதற்கும், உக்ரைன் ஐ.நா-வின் அனைத்து வழிமுறைகளும் பயன்படுத்தும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ரஷ்யாவுக்கு இடமளிக்கக் கூடாது" என ட்விட்டரில் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism