Published:Updated:

20 ஆண்டு எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு! - எத்தியோப்பியா பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

அபய் அஹமத் அலி
News
அபய் அஹமத் அலி

உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமர் அபய் அஹமத் அலிக்கு வழங்கப்பட்டுள்ளது

1901-ம் ஆண்டு முதல் இன்று வரை 118 வருடங்களாக, ஆல்பிரெட் நோபல் நினைவாக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளில் 2019-க்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயில் இன்று அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசை மட்டும் நார்வேயில் அளிக்க வேண்டும் என்ற ஆல்பிரட் நோபலின் விருப்பத்திற்கேற்ப நார்வேயில் அளிக்கப்படுகிறது.

அபய் அஹமத் அலி
அபய் அஹமத் அலி

இதற்கான காரணம் எதையும் ஆல்பிரட் நோபல் கூறவில்லை. உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு அபய் அஹமத் அலிக்கு வழங்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவுக்கும் எரிட்ரியாவுக்கும் இடையே எழுந்த எல்லைப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுத்ததற்காகவும், உலகளவில் அமைதியை நிலைநாட்ட பாடுபட்டதற்காகவும் எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமத் அலிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பரிசுத் தொகையான 9 மில்லியன் குரோனர், அதாவது இந்திய மதிப்பில் 6,50,63,700 ரூபாய் வழங்கப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நோபல் பரிசில் மிகவும் ஆவலுடன் மக்களால் எதிர்பார்க்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள பிரதமர் அபய், சைபர் இன்டெலிஜென்ஸ் பிரிவில் ராணுவ அதிகாரியாக பணியாற்றியுள்ளார். சிறை வைக்கப்பட்ட பத்திரிகையாளர்களை விடுவித்தது, துன்புறுத்திய அதிகாரிகளை சட்டத்தின் முன் நிற்க வைத்தது என இவரது நடவடிக்கைகள் சர்வதேச கவனம் பெற்றன. கடந்த 10 ஆண்டுகளில் எத்தியோப்பியா பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அபய் அஹமத் அலி
அபய் அஹமத் அலி

கடந்த 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் மலாலா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகள் உரிமை நல ஆர்வலரான கைலாஷ் சத்யார்த்தி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.