Published:Updated:

`எதிரி எல்லா நேரத்திலும் எதிரிதான்..!'- சீனாவைப் பாராட்டி தென்கொரியாவை எச்சரித்த வடகொரியா

கிம் ஜாங் உன் ( AP )

கொரோனா வைரஸை மிகவும் திறம்பட செயல்பட்டு கட்டுப்படுத்திய சீனாவுக்கு, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

`எதிரி எல்லா நேரத்திலும் எதிரிதான்..!'- சீனாவைப் பாராட்டி தென்கொரியாவை எச்சரித்த வடகொரியா

கொரோனா வைரஸை மிகவும் திறம்பட செயல்பட்டு கட்டுப்படுத்திய சீனாவுக்கு, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Published:Updated:
கிம் ஜாங் உன் ( AP )

மனிதகுலத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொடூரமான இந்த கொரோனா நேரத்திலும் சர்வதேச அளவில் அதிகம் கவனம் ஈர்த்த செய்திகளில் முதல் இடத்தில் இருப்பது, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை தொடர்பான செய்திதான். கடந்த சில வாரங்களாக கிம் ஜாங் உன் தொடர்பான பல்வேறு வதந்திகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்தன.

தொழிற்சாலை திறப்பில் கிம் ஜாங் உன்
தொழிற்சாலை திறப்பில் கிம் ஜாங் உன்

அதிக புகை மற்றும் மதுப் பழக்கம், அளவை மீறிய உடல் எடை, உணவு பழக்கவழக்கம் போன்ற காரணத்தால் கிம்முக்கு இதயப் பிரச்னை ஏற்பட்டதாகவும், அதற்காக நடந்த அறுவை சிகிச்சை தோல்வியடைந்துவிட்டதால், கிம் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் செய்திகள் தீயாய்ப் பரவின. உலகிலேயே அதிக கட்டுப்பாடுகள் மற்றும் ரகசியத்துடன் இருக்கும் நாடு, வட கொரியா. அங்கிருந்து, அந்நாட்டு அதிபரைப் பற்றியே வெளிவரும் வதந்திகளின் உண்மைத்தன்மையை அறிய பலநாடுகளும் போராடின. குறிப்பாக தென் கொரியா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இறுதியாகக் கடந்த வாரம், வட கொரியாவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உரத் தொழிற்சாலையை கிம் ஜாங் உன் திறந்துவைத்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது. அதன் பிறகே கிம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இருந்தும், தொழிற்சாலை திறப்புவிழாவில் பங்கேற்றது கிம் இல்லை என்பதுபோல பல செய்திகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.

கிம் ஜாங் உன் - ஜி ஜின்பிங்
கிம் ஜாங் உன் - ஜி ஜின்பிங்

இந்நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு வாய்வழி பாராட்டு தெரிவித்துள்ளதாக வட கொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‘உலகத்தை அச்சுறுத்திவரும் கொடுமையான கொரோனா வைரஸ் தாக்குதலின்போது, மிகவும் திறம்பட செயல்பட்டு அதிலிருந்து மீண்டு வந்ததற்கு சீனாவுக்கு பாராட்டுகள்’ என கிம் கூறியுள்ளதாகவும், சீன அதிபரின் உடல்நிலையைப் பார்த்துக்கொள்ளும்படி அவருக்குக் கூறியதாகவும் அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது ஒருபுறம் என்றால், தென் கொரியாவுக்கு எச்சரிக்கைவிடுக்கும் மற்றொரு செய்தியையும் கே.சி.என்.ஏ ஊடகம் வெளியிட்டுள்ளது. 20 நாள்களுக்குப் பிறகு, கிம் முதன் முதலாக மக்கள் மத்தியில் வந்தபோது, வட மற்றும் தென் கொரிய எல்லையில் ராணுவத்தினருக்கிடையே துப்பாக்கிச்சூடு நடந்ததாகத் தகவல்கள் வெளியாகின. வட கொரியாதான் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்பட்டது.

கொரிய எல்லை
கொரிய எல்லை
AP

இதற்கிடையில், தென் கொரியாவுக்கு எச்சரிக்கை அறிக்கை விடுத்துள்ளார் வடகொரியாவின் ராணுவப் பிரதிநிதி. அதில், ‘கடந்த புதன் கிழமை, தென் கொரியா தங்கள் எல்லையில் மேற்கொண்ட ராணுவப் பயிற்சி, இரு நாட்டு எல்லையில் பதற்றங்களை அதிகரிப்பதாக உள்ளது. இந்தப் பயிற்சி இரு நாட்டு ஒப்பந்தங்களையும் மீறியுள்ளது. சமீபகாலமாக அவர்கள் செய்து வரும் செயல்கள், எதிரி எல்லா நேரத்திலும் எதிரிதான் என்ற உண்மைக்கு வெளிப்படையாக நம்மை அழைத்துச்செல்கிறது.

2018-ம் ஆண்டு நடந்த வடக்கு - தெற்கு ஆகிய இரு கொரிய நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு முன் இருந்ததுபோல அனைத்தும் தற்போது தொடக்க நிலைக்குச் செல்கிறது என்றே தோன்றுகிறது. தென் கொரியாவின் செயல்களைப் பார்த்து அமைதி காக்க மாட்டோம், சரியான நேரத்தில் தக்க பதிலடி தரப்படும்” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கே.சி.என்.ஏ ஊடகம் வெளியிட்டுள்ள இந்த இரு செய்திகளும் சர்வதேச அளவில் அதிகக் கவனம் பெற்றுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism