Published:Updated:

ஒரே மாதத்தில் 5-வது முறையாக ஏவுகணை சோதனை செய்த வட கொரியா!

வட கொரியாவின் ஏவுகணை சோதனை

வட கொரியா ஒரே மாதத்தில் ஐந்தாவது முறையாக ஏவுகணை சோதனையை நடத்தியிருப்பது மற்ற நாடுகளின் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறது.

ஒரே மாதத்தில் 5-வது முறையாக ஏவுகணை சோதனை செய்த வட கொரியா!

வட கொரியா ஒரே மாதத்தில் ஐந்தாவது முறையாக ஏவுகணை சோதனையை நடத்தியிருப்பது மற்ற நாடுகளின் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறது.

Published:Updated:
வட கொரியாவின் ஏவுகணை சோதனை

வட கொரியா ஒரே மாதத்தில் ஐந்தாவது முறையாக ஏவுகணை சோதனையை நடத்தியிருப்பது உலக அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளைச் சோதித்துவருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக வட கொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது.

வடகொரியா
வடகொரியா

சர்வதேச நாடுகளின் பொருளாதாரத் தடை மற்றும் கொரோனா பரவல் காரணமாக வட கொரியாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துவருகிறது. ஆனால், வட கொரியா, தன் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், தொடர்ச்சியாக ஏவுகணைச் சோதனைகளை நடத்திவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த வகையில், வட கொரியா நேற்று ஒரே நாளில் இரண்டு ஏவுகணைகளை ஏவியதாகக் கூறப்படுகிறது. நாட்டின் தெற்குப் பகுதியிலிருந்து இரண்டு குரூஸ் ரக ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் ஐந்து ஏவுகணைச் சோதனைகளை வட கொரியா நடத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism