Published:Updated:

பொருளாதார நெருக்கடி; உணவுப் பற்றாக்குறை! - கம்பீர சிங்கத்தின் சோகமான நிலை #SudanAnimalRescue

சிங்கம்

சூடானில் உணவுப் பற்றாக்குறை காரணமாக ஊட்டச்சத்து குறைந்து எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் சிங்கங்களுக்கு உதவ வேண்டும் எனக் குரல்கள் வலுத்து வருகின்றன.

பொருளாதார நெருக்கடி; உணவுப் பற்றாக்குறை! - கம்பீர சிங்கத்தின் சோகமான நிலை #SudanAnimalRescue

சூடானில் உணவுப் பற்றாக்குறை காரணமாக ஊட்டச்சத்து குறைந்து எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் சிங்கங்களுக்கு உதவ வேண்டும் எனக் குரல்கள் வலுத்து வருகின்றன.

Published:Updated:
சிங்கம்

காடுகளின் அரசன் எனச் சொன்னதும் முதலில் நம் நினைவுக்கு வருவது சிங்கம்தான். ராஜா என்ற பெயருக்கு ஏற்றாற்போல் கம்பீரமான தோற்றமும், விரிந்த உடல் அமைப்பும், நிமிர்ந்த நடையும் கொண்ட சிங்கத்தைப் பார்த்தாலே அனைவரும் அஞ்சி நடுங்குவார்கள். ஆனால், கடந்த சில நாள்களாக இணையத்தில் உலாவரும் சில சிங்கங்களின் புகைப்படங்கள் பார்ப்பவர்கள் கண்ணில் கண்ணீர் வரவழைப்பதாக உள்ளன.

சிங்கம்
சிங்கம்

மெலிந்த உடல், வெளியில் தெரியும் எலும்பு, சோகமான முகம் என உயிரிழக்கும் தறுவாயில் உள்ளது அந்த சிங்கங்கள். வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடான், தலைநகர் கார்டூமில் உள்ளது அல்-குரேஷி விலங்கியல் பூங்கா. இங்கு சில வருடங்களாக ஐந்து சிங்கங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குரேஷி பூங்கா, கார்டூம் நகராட்சியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது, அவர்கள் தரும் நிதி மற்றும் தனியார் வழங்கும் நிதி மூலமே பூங்காவில் உள்ள விலங்குகளுக்குத் தேவையான உணவு, பராமரிப்பு போன்றவை செய்யப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அங்குள்ள சிங்கங்களுக்கு அளிக்க போதுமான உணவு மற்றும் மருந்து இல்லாததால் ஊழியர்கள் பெரும் சிரமமடைந்துள்ளனர். இதன் காரணமாகவே அவை உடல் மெலிந்து காணப்படுகின்றன. இந்தச் சிங்கங்களுக்குப் பாதுகாப்பான நல்ல வசதியுடன் கூடிய வேறு இடம் தேவை என நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் குரலெழுப்பி வருகின்றனர். #SudanAnimalRescue என்ற ஹாஸ்டேக் உலகம் முழுவதும் பரப்பப்பட்டு வருகிறது.

சிங்கம்
சிங்கம்

சிங்கங்களின் நிலை பற்றிப் பேசியுள்ள பூங்கா நிர்வாகிகள், ``கடந்த சில வாரங்களாகவே சிங்கங்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவை தங்களின் உடல் எடையில் மூன்றில் இரண்டு பங்கை இழந்து விட்டன. சிங்கங்களுக்குத் தேவையான உணவு இல்லை; அதற்கான நிதியும் இல்லை. எனவே, எங்களின் சொந்தச் செலவில்தான் தற்போது வரை அவற்றைப் பராமரித்து வருகிறோம்” எனப் பூங்கா இயக்குநர் எஸ்ஸமெல்டின் ஹஜ்ஜர் (Essamelddine Hajjar) கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிகரிக்கும் உணவு விலை மற்றும் பணப் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக சூடான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. நேற்று நூற்றுக்கணக்கான மக்கள் பூங்காவைப் பார்வையிடுவதற்காக வந்துள்ளனர். அப்போது சிங்கத்தின் நிலையைக் கண்டு அதிர்ந்த அவர்கள் அவற்றின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். இந்தப் பூங்கா மட்டுமல்லாது, சூடானில் உள்ள பெரும்பாலான பூங்காக்களிலும் விலங்குகளின் நிலை மோசமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

``விலங்குகள் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவை நோய்வாய்ப்பட்டுள்ளது” என பூங்காவின் மற்றொரு நிர்வாகி தெரிவித்துள்ளார். சூடான் முழுவதும் எத்தனை சிங்கங்களுக்கு இந்தநிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரியவில்லை. ஆனால், எத்தியோப்பிய எல்லையில் உள்ள அனைத்துச் சிங்கங்களின் நிலையும் மோசமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism