Published:Updated:

``உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர மோடி, போப் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும்!" - ரஷ்யா

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்

``பேச்சுவார்த்தைக்கான புதிய வழிமுறைகளை உருவாக்குவதும், நம்பிக்கையை வளர்ப்பதும், பதற்றங்களை குறைப்பதும், நீடித்த அமைதிக்கான வழியைத் திறப்பதுமே அந்தக் குழுவின் நோக்கமாக இருக்கும்.'' - ரஷ்யா

``உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர மோடி, போப் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும்!" - ரஷ்யா

``பேச்சுவார்த்தைக்கான புதிய வழிமுறைகளை உருவாக்குவதும், நம்பிக்கையை வளர்ப்பதும், பதற்றங்களை குறைப்பதும், நீடித்த அமைதிக்கான வழியைத் திறப்பதுமே அந்தக் குழுவின் நோக்கமாக இருக்கும்.'' - ரஷ்யா

Published:Updated:
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நிரந்தர அமைதிக்கு மத்தியஸ்தம் செய்ய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, போப் பிரான்சிஸ், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என ஐ.நா-விடம் ரஷ்யா கோரிக்கை வைத்திருக்கிறது.

இது தொடர்பாக ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் மர்செலொ லுயிஸ் எபர்ட் காசாபோன் (Marcelo Luis Ebrad Casaubón), நியூயார்க்கில் நடந்த ஐ.நா பாதுகாப்பு சபை தொடர்பான கூட்டத்தில், ``உக்ரைன்- ரஷ்யா இரு நாடுகளும் போரிலிருந்து அமைதியை அடைவதற்கான சிறந்த முயற்சிகளை மேற்கொள்ள சர்வதேச சமூகம் அதன் அமைதிவாத பங்களிப்பை வழங்க வேண்டும் என்று ரஷ்யா வேண்டுகோள்விடுக்கிறது.

மோடி - புதின்
மோடி - புதின்

மேலும், இது சம்பந்தமாக, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸின் மத்தியஸ்த முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக, உக்ரைனில் உரையாடல் மற்றும் அமைதிக்கான குழுவை உருவாக்க வேண்டும். மேலும், அந்த மத்தியஸ்தர குழுவில் அதற்காக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடரின் முன்மொழிவை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
உக்ரைன்
உக்ரைன்

முடிந்தால், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புனித போப் பிரான்சிஸ் உட்பட, மற்ற தலைவர்களும் இணைந்து பங்கேற்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கான புதிய வழிமுறைகளை உருவாக்குவதும், நம்பிக்கையை வளர்ப்பதும், பதற்றங்களை குறைப்பதும், நீடித்த அமைதிக்கான வழியைத் திறப்பதுமே அந்தக் குழுவின் நோக்கமாக இருக்கும்.

இதன் உருவாக்கம் ஐ.நா உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் தொடர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதனால், ஐ.நா பொதுச்செயலாளர் கூறியது போல் செயல்பட்டு, அமைதியை நிலைநாட்ட வேண்டிய நேரம் இது. போருக்குத் தீர்வு காண்பது எப்போதுமே அதலபாதாளத்துக்குச் செல்வதாகும். எனவே, அனைத்து தீவிரத்தன்மையிலிருந்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள சரியான நேரம் இது" எனத் தெரிவித்தார்.