Published:Updated:

``போலியான கலந்துரையாடல் வேண்டாம்; கோத்தபய, ரணில்... பதவி விலக வேண்டும்” - சஜித் பிரேமதாசா

சஜித் பிரேமதாசா ( ட்விட்டர் )

`இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும்' என இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்திருக்கிறார்.

``போலியான கலந்துரையாடல் வேண்டாம்; கோத்தபய, ரணில்... பதவி விலக வேண்டும்” - சஜித் பிரேமதாசா

`இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும்' என இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
சஜித் பிரேமதாசா ( ட்விட்டர் )

இலங்கை மக்களின் வாழ்க்கையே கேள்வி குறியாகியிருக்கிறது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. உள்நாட்டு விவசாய உற்பத்தி குறைக்கப்பட்டது. இதனால் ஏற்பட்டிருக்கிற பொருளாதார நெருக்கடி குடும்பங்களை பட்டினி, வறுமையில் தள்ளியிருக்கிறது.

அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் சூழ்ந்ததையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து கப்பலில் மூலம் தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், அவர் ராணுவ தலைமையகத்தில் தஞ்சமடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கை நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தைக் கூட்ட சபாநாயகருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை
இலங்கை
ட்விட்டர்

இந்நிலையில், இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் ``இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும். இலங்கை பிரதமர் அழைப்பு விடுக்கும் எந்தக் கூட்டத்திலும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பங்கேற்காது. மக்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பதுங்கியிருந்த ராஜபக்சேக்கள் மீண்டும் அரசியல் களத்துக்குக் கொண்டுவரப்பட்டு, பாதுகாக்கப்பட்டதும் இந்த போராட்டத்துக்கு துரோகம் இழைத்தவரும் தற்போதைய பிரதமர் ஆவார். இந்த நெருக்கடியில் அவரும் பிரதிவாதி என்பதைக் குறிப்பிட வேண்டும். கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசாங்கத்தின் பாதுகாவலர்களுடனும், வாயில் காப்பாளர்களுடனும் நாட்டின் எதிர்காலம் குறித்து கலந்துரையாட நாங்கள் விரும்பவில்லை. போலியான கலந்துரையாடல் வேண்டாம்'' எனத் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இலங்கை
இலங்கை
ட்விட்டர்

மேலும் இலங்கை அதிபரும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்திய நிலையில், இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் இல்லத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், அரசியலமைப்பு விதிகளின்படி இலங்கை சபாநாயகர் தற்காலிக அதிபராக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது தொடர்பாக அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.