Published:Updated:

இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மோதல்... நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!

இந்திய - சீன எல்லை

``இந்திய, சீன வீரர்களின் மோதல் குறித்து நாடாளுமன்றத்துக்கு ஏன் தெரிவிக்கவில்லை... மத்திய அரசு, நாட்டை இருளில் வைத்திருக்கிறது." - எதிர்க்கட்சிகள்

இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மோதல்... நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!

``இந்திய, சீன வீரர்களின் மோதல் குறித்து நாடாளுமன்றத்துக்கு ஏன் தெரிவிக்கவில்லை... மத்திய அரசு, நாட்டை இருளில் வைத்திருக்கிறது." - எதிர்க்கட்சிகள்

Published:Updated:
இந்திய - சீன எல்லை

அருணாச்சலப் பிரதேச மாநிலம், தாவாங்கு பகுதிக்கு அருகேயுள்ள இந்திய - சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் கடந்த 9-ம் தேதி சீன ராணுவ வீரர்கள் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்றதாகவும், அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள், சீன வீரர்களைத் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் வெடித்த மோதல் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நீடித்த நிலையில், இரு தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. பின்னர் இரு தரப்பு வீரர்களும் தங்கள் பகுதிக்குத் திரும்பிவிட்டதாக ராணு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜக தலைவர்கள்
பாஜக தலைவர்கள்

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்துவருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் விவாதம் நடத்துவதற்காக காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஒத்திவைப்பு நோட்டீஸ் அனுப்பவிருக்கின்றனர். எம்.பி அசாதுதீன் ஒவைசி, மக்களவையில் இந்த விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்தைத் தாக்கல் செய்வார் எனக் கூறப்படுகிறது. மேலும், "இந்திய, சீன வீரர்களின் மோதல் குறித்து நாடாளுமன்றத்துக்கு ஏன் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு நாட்டை இருளில் வைத்திருக்கிறது" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "தேசியப் பாதுகாப்பு பிரச்னைகளில் நாங்கள் தேசத்துடன் ஒன்றாக இருக்கிறோம், அதை அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால், ஏப்ரல் 2020 முதல் எல்லை கோட்டுக்கு அருகிலுள்ள அனைத்துக் கட்டங்களிலும் சீன அத்துமீறல்கள் மற்றும் கட்டுமானங்கள் குறித்து மோடி அரசாங்கம் நேர்மையாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

 மோடி - காங்கிரஸ்
மோடி - காங்கிரஸ்

காங்கிரஸின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "எதிர்க்கட்சிகள் சீன நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தை விழிக்கவைக்க முயன்றுவருகின்றன, ஆனால் ஆளும் பாஜக தனது அரசியல் பிம்பத்தைப் பாதுகாக்க அமைதியாக இருக்கிறது" எனக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஆனால், மத்திய பா.ஜ.க அரசு வாட்டாரங்கள், "எந்தவொரு கலந்துரையாடலிலிருந்தும் மத்திய அரசு ஒருபோதும் பின்வாங்கவில்லை, உண்மைகளுடன் தயாராக இருக்கிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்ற சபையில் விளக்கம் அளிக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும்" எனத் தெரிவித்திருக்கிறது.