Published:Updated:

இந்தியாவில் பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கம்!

ட்விட்டர்

பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கம்!

பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
ட்விட்டர்

உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ட்விட்டரும் ஒன்று. அரசுகள் தொடங்கி அதிகாரிகள் வரை அதிகாரபூர்வத் தகவல்களை ட்விட்டரில் வெளியிடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டு அரசுக்குச் சொந்தமான அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக இந்தக் கணக்கு ஜூலை மாதத்திலும் நிறுத்திவைக்கப்பட்டது. பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கத்தை, மத்திய அரசின் சட்டபூர்வ கோரிக்கையை ஏற்று ட்விட்டர் பக்கம் நிறுத்திவைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தியாவில் பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கம்!

எதற்காக பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கத்தை நிறுத்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை. ஒரு நாட்டின் சட்ட விதிகளுக்கு மாறாக இருந்தால், உள்ளூர் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று ட்விட்டர் நிறுவனம் இது போன்று கணக்குகளை நிறுத்திவைக்கும் நடைமுறையை மேற்கொண்டுவருகிறது. மேலும், இந்தியாவுக்கு எதிரான வெறுப்பைப் பரப்பும் 100-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள், நான்கு ஃபேஸ்புக் பக்கங்கள், ஐந்து ட்விட்டர் கணக்குகள், மூன்று இன்ஸ்டாகிராம் கணக்குகளை மத்திய அரசு இதுவரை முடக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.