Published:Updated:

பொருளாதார நெருக்கடி... கடும் மின் தட்டுப்பாடு - இலங்கையைத் தொடர்ந்து பரிதவிக்கும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான்

பொருளாதார நெருக்கடி காரணமாகவே இம்ரான் கான் அரசு பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு, பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

பொருளாதார நெருக்கடி... கடும் மின் தட்டுப்பாடு - இலங்கையைத் தொடர்ந்து பரிதவிக்கும் பாகிஸ்தான்!

பொருளாதார நெருக்கடி காரணமாகவே இம்ரான் கான் அரசு பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு, பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

Published:Updated:
பாகிஸ்தான்

நிலக்கரி வாங்க அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததாலும், கடுமையான விலை உயர்வாலும் பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.

இந்த பொருளாதார நெருக்கடி காரணமாகவே இம்ரான் கான் அரசு பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு, பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு 185 ரூபாய் என்ற அளவுக்கு சரிந்திருக்கிறது.

இம்ரான் கான்
இம்ரான் கான்

இந்த அசாதாரண சூழலை சமாளிக்க சர்வதேச நிதியத்திடம் கடன் வாங்கப் பாகிஸ்தான் முயன்றது. ஆனால், பிரான்ஸ் நாட்டின் நிதிக் கட்டுப்பாட்டு அமைப்பு கருப்பு பட்டியலுக்கு முந்தைய பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்த்துள்ளதால், உலக நாடுகளின் நிதி உதவி கிடைக்காமல் பாகிஸ்தான் திணறி வருகிறது. மேலும், பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சில நிபந்தனைகளுடன் கடன் வழங்க முன்வந்தன. இருப்பினும், நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் பரிதவித்துக் கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

இந்த நிலையில், அந்த நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததால் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் வாங்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால், பாகிஸ்தானில் கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் மின்துறை வட்டாரங்கள், ``உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாகிஸ்தான் பெரும் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மின்சாரம்
மின்சாரம்

நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதனால் பாகிஸ்தானின் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. நிலக்கரி பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏராளமான ஆலைகள் மூடப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் மின் உற்பத்தித் திறன் சுமார் 35,000 மெகாவாட் ஆற்றலைக் கொண்டது.

ஆனால், 7 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தற்போதைய விநியோகத்தைக் கையாள முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது" என்று கூறுகின்றன.

ஷெபாஸ் ஷெரீப்,
ஷெபாஸ் ஷெரீப்,

பாகிஸ்தானின் கிராமப்புறங்களில் நாள்தோறும் 18 மணிநேரம் வரையிலும்கூட மின்வெட்டு நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ```பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு இது முதல் சவாலாகும். தள்ளாடும் பொருளாதாரத்துடன் அதிகரித்து வரும் உலக எரிபொருள் விலையும் பாகிஸ்தானை புதிய நெருக்கடிக்கு ஆளாக்கியிருக்கிறது. எரிபொருள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதால் பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி முடிந்துவிடும் சூழல் தற்போது இல்லை. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையைப் போல தற்போது பாகிஸ்தானும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருகிறது" என்கிறார்கள் உலக அரசியலை உற்றுநோக்குபவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism