Published:Updated:

பால்கோட் தாக்குதலுக்குப் பிறகு திறக்கப்படும் பாக். வான்வழி - மகிழ்ச்சியில் இந்திய விமான நிறுவனங்கள்!

பாகிஸ்தான் வான்வழியில் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில மாதங்களாக நஷ்டத்தைச் சந்தித்து வந்தது.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

பயங்கரவாதிகள் புல்வாமாவில் நடத்திய அதிபயங்கர தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய விமானப்படை கடந்த பிப்ரவரி மாதம் பால்கோட்டில் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் நாடுகள் இடையே அசாதாரமான சூழல் ஏற்பட்டது.

இந்திய விமானப் படை
இந்திய விமானப் படை

இதைத் தொடர்ந்து இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியே பறக்க பாகிஸ்தான் தடை விதித்தது. இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் விமானம் இதனால் சுற்றிப்போகும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நேற்று நள்ளிரவு நீக்கியுள்ளது பாகிஸ்தான். இதன் மூலம் நள்ளிரவு 12.41 முதல் இந்திய பயணிகள் விமானமும் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்த முடியும்.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

பாகிஸ்தான் தடையை நீக்கியுள்ளதன் காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் பெரும் நிம்மதி அடையும். காரணம் பிப்ரவரி மாதம் முதல் கடந்த மே 2-ம் தேதி வரை ஏர் இந்திய நிறுவனம் சுமார் 491 கோடி ரூபாய் கூடுதலாக செலவிட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளுக்கான பயணங்களை ரத்தும் செய்துள்ளது.

குறிப்பாக, டெல்லியிலிருந்து ஐரோப்பியா நாடுகளுக்குச் செல்லும் விமானங்களும் அமெரிக்காவுக்குச் செல்லும் பல விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தனியார் விமானங்களும் இந்த வான்வழித் தடை காரணமாக நஷ்டங்களைச் சந்தித்துள்ளது.

பால்கோட் தாக்குதலுக்குப் பிறகு திறக்கப்படும் பாக். வான்வழி - மகிழ்ச்சியில் இந்திய விமான நிறுவனங்கள்!

கடந்த சில மாதங்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் விரையில் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியில் இயங்கத் தொடங்கும் எனத் தெரிகிறது.