Published:Updated:

``உங்கள் ஆட்சிதான் எரிபொருள் விலை ஏற்றத்துக்குக் காரணம்” - இம்ரான் கானுக்கு ஷெபாஸ் ஷெரீப் பதிலடி

ஷெபாஸ் ஷெரீப்

``புதிய அரசாங்கம் தற்போது மிகப்பெரிய பொருளாதார, அரசியல் சவால்களை எதிர்கொண்டுவருகிறது” என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருக்கிறார்.

``உங்கள் ஆட்சிதான் எரிபொருள் விலை ஏற்றத்துக்குக் காரணம்” - இம்ரான் கானுக்கு ஷெபாஸ் ஷெரீப் பதிலடி

``புதிய அரசாங்கம் தற்போது மிகப்பெரிய பொருளாதார, அரசியல் சவால்களை எதிர்கொண்டுவருகிறது” என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ஷெபாஸ் ஷெரீப்

`பாகிஸ்தானை ஆளும் மோசடிக் கும்பலால் நாடு பெரும் பணவீக்கத்தைச் சந்திக்கப்போகிறது’ என முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஷெபாஸ் ஷெரீப் அரசைக் கடுமையாகச் சாடினார்.

மேலும், பாகிஸ்தான் அரசு வியாழக்கிழமை பெட்ரோலியப் பொருள்களின் விலையை லிட்டருக்கு ரூ.30 உயர்த்தியது. இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, பெட்ரோல் விலை ரூ.179.85 ஆகவும், டீசல் ரூ.174.15 ஆகவும், மண்ணெண்ணெய் ரூ.155.95 ஆகவும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனால் மக்கள் இன்னும் சிரமப்பட்டுவருகின்றனர்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் இது தொடர்பாக,``கனத்த இதயத்துடன் பெட்ரோலியத்தின் விலையை உயர்த்தினோம். இந்தக் கடினமான பொருளாதாரச் சூழ்நிலையில் இப்படிப்பட்ட முடிவை எடுக்கவேண்டியுள்ளது. உலகச் சந்தையில் பெட்ரோலியத்தின் விலை நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்திருப்பதே இதற்குக் காரணம்.

இம்ரான் கான் அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்தது. நாங்கள் அல்ல. சர்வதேச நாணய நிதியத்தின் கடினமான நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள், நாங்கள் அல்ல. தற்போது நாட்டை ஒரு பொருளாதார குழப்பத்துக்குள் தள்ளியிருக்கிறீர்கள். முந்தைய அரசாங்கம் நாட்டை அழித்துவிட்டது. பாகிஸ்தான் திவாலாவதைத் தவிர்க்க எரிபொருள் விலையை உயர்த்தும் நடவடிக்கை அவசியம். இம்ரான் கான் ஆட்சிதான் எரிபொருள் விலையின், பெரிய ஏற்றத்துக்குக் காரணம். ஆனால் நாங்கள் மக்களின் கோரிக்கையை ஏற்று ஊழலற்ற அரசாக மாற்றினோம். புதிய அரசாங்கம் மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொண்டுவருகிறது'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism