Published:Updated:

‘ராணுவ வீரர்களுக்கு ஆபத்து!’- வைரஸ் நோயாளிகளை PoK பகுதிக்கு மாற்றும் பாகிஸ்தான்?

பாகிஸ்தான்
பாகிஸ்தான் ( AP )

பாகிஸ்தானில் வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்கு அந்நாட்டு ராணுவம் மாற்றுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா, சீனா, இத்தாலி ஆகிய நாடுகளில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,000-த்தைக் கடந்துவிட்டது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,000-ஆக உள்ளது. உலகின் வல்லரசு நாடு முதல் ஏழ்மையான நாடு வரை வைரஸின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்
AP

அந்த வரிசையில் பாகிஸ்தானில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,200- ஆக உள்ளது. இதுவரை அங்கு 9 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம்தான் வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் ராணுவ வீரர்களின் முகாம்களும் இருப்பதால் மக்களால் வீரர்களுக்கும் வைரஸ் பரவிவிடுமோ என அந்நாட்டு ராணுவம் அஞ்சுகிறது. இதனால் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி மற்றும் கில்கிட் ஆகிய நகரங்களுக்கு மாற்றத் தொடங்கியுள்ளது அந்நாட்டு ராணுவம்.

`குருத்துவாரா தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான்?’ -ஐ.எஸ் பொறுப்பேற்பில் கேள்வியெழுப்பும் இந்தியா

வைரஸால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நோயாளியும் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கக் கூடாது என அந்நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்துவர்கள் இல்லாததால் அங்கு மாற்றப்பட்டுள்ள நோயாளிகள் பெரும் அச்சம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தனிமைப்படுத்த மையங்கள் அமைக்க உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதையும் மீறி நோயாளிகளை இடமாற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்
AP

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களால் உள்ளூர் வாசிகளும் அங்கு உள்ள பழங்குடி மக்களுக்கும் ஆபத்து ஏற்படும் என அவர்கள் அஞ்சுகிறார்கள். ஆனால் ராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இதைப்பற்றி கவலைப்படவில்லை. ஏனெனில் பஞ்சாப் மாகாணத்தை ஒப்பிடும் போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்கிட் ஆகிய பகுதிகள் பாகிஸ்தானில் அரசியல் முக்கியத்துவம் இல்லாதவையாக கருதப்படுவதால் இவ்வாறு செய்யப்படுவதாக உள்ளூர் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு