Published:Updated:

``பாகிஸ்தானியர்கள் இந்தியாவின் எதிரிகளல்லர்; அரசியல் செய்ய விரும்புவோருக்கு மட்டுமே..." - சரத் பவார்

சரத் பவார்

"பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானுக்கு வழிகாட்ட முயன்ற தலைவர். ஆனால் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்." - சரத் பவார்

``பாகிஸ்தானியர்கள் இந்தியாவின் எதிரிகளல்லர்; அரசியல் செய்ய விரும்புவோருக்கு மட்டுமே..." - சரத் பவார்

"பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானுக்கு வழிகாட்ட முயன்ற தலைவர். ஆனால் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்." - சரத் பவார்

Published:Updated:
சரத் பவார்

புனேவின் கோந்த்வாவில் ‘ஈத் மிலன்’ விழா நடைபெற்றது. அதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) தலைவர் சரத் பவார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். பல்வேறு நாடுகள் குறித்தும் தனது கருத்துகளை அதில் தெரிவித்தார். அப்போது அவர், ``இன்று உலகில் ஒரு வித்தியாசமான சூழ்நிலை நிலவுகிறது. ரஷ்யா போன்ற ஒரு சக்திவாய்ந்த நாடு உக்ரைன் போன்ற சிறிய நாட்டைத் தாக்குகிறது, இலங்கையில் இளைஞர்கள் அனைவரும் சாலையில் சண்டையிடுகிறார்கள், போராடுகிறார்கள். அந்த நாட்டின் தலைவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

சரத் பவார்
சரத் பவார்

அதேபோல, உங்களுக்கும் எனக்கும் சகோதரர்கள் உள்ள அண்டை நாடான பாகிஸ்தானில் ஒரு தலைவர் 2018-ல் பதவியேற்றார். ஆனால் அவரின் பிரதமர் பதவி என்பது சக்திவாய்ந்த ராணுவத்தின் 'பொம்மை' என்று கேலி செய்யப்பட்டார். அதையும் கடந்து அவர் நாட்டுக்காக உழைத்தார். அந்த நாட்டுக்கு வழிகாட்ட முயற்சி மேற்கொண்டார், ஆனால், எதிர்க்கட்சிகளால் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இப்போது அங்கு வேறு ஒரு படம் காட்டப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இம்ரான் கான்
இம்ரான் கான்

நான் மத்திய அமைச்சராகவும், கிரிக்கெட் நிர்வாகியாகவும் பலமுறை பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கிறேன். அப்போது லாகூர், கராச்சி என எங்கு சென்றாலும் எங்களுக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒருமுறை, நாங்கள் நமது அணியுடன் ஒரு போட்டிக்காக கராச்சியிலிருந்தோம். ஒரு நாள் கழித்து, வீரர்கள் தங்களைச் சுற்றியுள்ள இடங்களைப் பார்க்க விருப்பம் தெரிவித்தனர். காலை உணவுக்காக ஓர் உணவகத்துக்குச் சென்றோம், கட்டணத்தைச் செலுத்த முயன்றபோது, ​​உணவக உரிமையாளர் மறுத்துவிட்டார். நாங்கள் அவரின் விருந்தினர்கள் என்று கூறினார். எனவே, பொதுவாக பாகிஸ்தானியர்கள் இந்தியாவின் எதிரிகள் அல்லர்; அவர்களின் நாட்டில், அரசியல் செய்ய விரும்புவோருக்கு மட்டுமே மோதல்கள் உருவாகின்றன" எனக் குறிப்பிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism