Published:Updated:

‘சிறை உணவில் கலக்கப்பட்ட விஷம்..?’ -தீவிர சிகிச்சைப் பிரிவில் நவாஸ் ஷெரீஃப்

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் உடலில் விஷம் கலந்துள்ளதாக அவரது மகன் உசேன் குற்றம் சாட்டியுள்ளார்.

நவாஸ் ஷெரிஃப்
நவாஸ் ஷெரிஃப்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீஃப் பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி, தற்போது சிறைத் தண்டனை அனுபவித்துவருகிறார். இவர், பாகிஸ்தானில் மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்தவர். அந்நாட்டில் உள்ள முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

நவாஸ் ஷெரிஃப்
நவாஸ் ஷெரிஃப்

நவாஸ் மீது ஊழல் வழக்குகள் உள்ளதாகக் கடந்த 2017-ம் ஆண்டு பதவிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர், 2018 ஜூலை மாதம் லண்டன் சென்றுவிட்டு பாகிஸ்தான் திரும்பும்போது, விமான நிலையத்திலேயே வைத்து கைதுசெய்யப்பட்டார். இவர்மீது 3 ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பனாமா பேப்பர்ஸ் வழக்குகளில் ஒன்றான அல் - அஸிஸியா ஸ்டீல் மில்ஸ் ஊழல் வழக்கில் நவாஷ் ஷெரீஃபுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு உச்ச நீதிமன்றம்.

பி.எம்.டபிள்யூ கார்... வைர நெக்லஸ்... அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை!

அதன்படி, தற்போது அவர் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு, நவாஸ் ஷெரீஃபின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. பின்னர், அவர் சிறையிலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இதற்கிடையில், நவாஷின் உடலில் விஷம் கலந்திருப்பதாக அவரது மகன் உசேன் ஷெரீஃப் குற்றம் சாட்டியுள்ளார். லண்டனில் உள்ள உசேன், இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். “என் தந்தை சிறையிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது, அவரது உடலில் உள்ள ரத்த அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்துள்ளது. இதனால், அவருக்குச் சிறையில் விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

அவரது ரத்த அணுக்களின் எண்ணிக்கை 16,000 - ஆகக் குறைந்துள்ளது. என் தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடையும் வரை அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாதது ஏன்? இதற்குப் பிரதமர் இம்ரான் கானின் அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அயாஸ் மஹ்மூத் தலைமையிலான மருத்துவக் குழு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷெரீஃபின் உடலை நேற்று பரிசோதித்தது. 2000-ஆக இருந்த அவரின் ரத்த அணுக்கள் தற்போது 20,000 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவர் கூறினார். இருந்தும் ஷெரீஃபின் உடல்நிலை மோசமாகவே உள்ளது” என்றும் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் அட்டாவுல்லா தாரார் தெரிவித்துள்ளார்.

நவாஸ் ஷெரிஃப்
நவாஸ் ஷெரிஃப்

பொதுவாக, ஒரு நபரின் ரத்த அணுக்கள் 1,50,000 முதல் 4,00,000 வரை இருக்க வேண்டும். ஆனால், நவாஷின் ரத்த அணுக்கள் 20,000 மட்டுமே உள்ளன. “நவாஸின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என நவாஸை கஸ்டடியில் வைத்துள்ள என்.ஏ.பி தெரிவித்துள்ளது.