Published:Updated:

பில்கிஸ் பானோ: ``குற்றவாளிகளுக்கு பொறுப்பேற்கத் தவறியது நீதியின் கேலிக்கூத்து..!" - USCIRF கண்டனம்

பில்கிஸ் பானோ

``2002 குஜராத் கலவரத்தில் கொலை மற்றும் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குப் பொறுப்பேற்கத் தவறியது நீதியின் கேலிக்கூத்து." - USCIRF

பில்கிஸ் பானோ: ``குற்றவாளிகளுக்கு பொறுப்பேற்கத் தவறியது நீதியின் கேலிக்கூத்து..!" - USCIRF கண்டனம்

``2002 குஜராத் கலவரத்தில் கொலை மற்றும் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குப் பொறுப்பேற்கத் தவறியது நீதியின் கேலிக்கூத்து." - USCIRF

Published:Updated:
பில்கிஸ் பானோ

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரின் 2 வயதுக் குழந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 14 பேர் மிகக் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சுதந்திர தினத்தன்று குற்றவாளிகள் 11 பேரையும் குஜராத் அரசு விடுதலை செய்தது. அவர்கள் சிறை வாசலிலேயே ஆரத்தி எடுக்கப்பட்டு, வெற்றித் திலகமிட்டு, இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்ட வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சர்வதேச மத சுதந்திரத்திற்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் (USCIRF) கமிஷன் துணைத் தலைவர் ஆபிரகாம் கூப்பர் (Abraham Cooper), ``2002 குஜராத் கலவரத்தின்போது பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிராகக் கர்ப்பிணி முஸ்லிம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, 14 முஸ்லிம் நபர்களைக் கொடூரமான கொலைசெய்த ஆயுள் தண்டனை கைதிகள் 11 பேரை முன்கூட்டியே, நியாயமற்ற முறையில் விடுதலை செய்ததை யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் கடுமையாகக் கண்டிக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
USCIRF
USCIRF

யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் கமிஷனர் ஸ்டீபன் ஷ்னெக் (Stephen Schneck), "2002 குஜராத் கலவரத்தில் கொலை மற்றும் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குப் பொறுப்பேற்கத் தவறியது நீதியின் கேலிக்கூத்து. மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு, இந்தியாவில் தண்டனை வழங்கப்படாத வடிவத்தின் சிறு பகுதியே இது" எனக் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.