Published:Updated:

இலங்கை அமைச்சரவையின் ஒரே பெண் அமைச்சர் - பவித்ரா வன்னியராச்சி!

இலங்கையின் முதல் பெண் பிரதமரான சிரிமாவோ பண்டாரநாயகேவின் விருப்பத்துக்கு இணங்க 1990-ல் அரசியலுக்குள் நுழைந்தவர் பவித்ரா தேவி.

பவித்ரா வன்னியராச்சி
பவித்ரா வன்னியராச்சி

மகிந்த ராஜபக்சே தலைமையிலான 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவைக்கு இலங்கையில், நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே. புதிய அமைச்சரவையின் ஒரே பெண் அமைச்சராக பவித்ரா தேவி வன்னியராச்சி பொறுப்பேற்றிருக்கிறார். இவருக்கு பெண்கள், குழந்தைகள் நலன் மற்றும் சமூகப் பாதுகாப்புத்துறை, சுகாதாரம் மற்றும் மண்சார்ந்த மருத்துவத்துறை ஆகிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்பு மகிந்த ராஜபக்‌சேவின் வலது கை; இப்போது இலங்கை அதிபர் - யார் இந்த கோத்தபய ராஜபக்‌சே?

இலங்கையின் முதல் பெண் பிரதமரான சிரிமாவோ பண்டாரநாயகேவின் விருப்பத்துக்கு இணங்க 1990-ல் அரசியலுக்குள் நுழைந்தவர் பவித்ரா தேவி. இலங்கை விடுதலைக் கட்சியின் மகளிர் அணித்தலைவராக இருந்தவர். பின்னர், 1993-ல் சபரகுமாவா மாகாண உறுப்பினராகவும் 1994-ல் ரத்னபுரா மாவட்டத்துக்கான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.

இலங்கை பவித்ரா வன்னியராச்சி
இலங்கை பவித்ரா வன்னியராச்சி

அடிப்படையில் வழக்கறிஞரான பவித்ரா இலங்கை உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றியவர். 2000-ம் வருடம் தொடங்கி இலங்கை அமைச்சரவையின் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்துவந்தார். இன அழிப்புப் போர் காலகட்டத்தில் அப்போது அதிபராக இருந்த மகிந்தாவின் கீழ் இளைஞர் நலன் துறை அமைச்சராக இருந்தவர் பவித்ரா. ``விடுதலைப்புலிகளுக்கு ரணில் விக்ரமசிங்கே மறைமுக ஆதரவு அளித்துவந்தார், பிரபாகரனிடம் இலங்கையின் ஒருபகுதியைக் கொடுத்துவிட்டார்’’ எனத் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தவர் பவித்ரா.