Published:Updated:

`வழக்கறிஞர் டு தென் கொரிய அதிபர்' - யார் இந்த யூன் சுக்-யோல்?!

தென் கொரியாவின் புதிய அதிபர் யூன் சுக்-யோல்

தென் கொரியாவில் தற்போது நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த ஜனநாயக கட்சியை வீழ்த்தி, மக்கள் சக்தி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

தென் கொரியாவில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் அதிபர் தேர்தலானது, இந்தாண்டு மார்ச் 9-ம் தேதி நடந்துமுடிந்துள்ளது. தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவில், ஆளுங்கட்சியான ஜனநாயகக் கட்சியை வீழ்த்தி, எதிர்க்கட்சியான மக்கள் சக்தி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் மக்கள் சக்தி கட்சியின் சார்பாக யூன் சுக்-யோல் தென் கொரியாவின் புதிய அதிபராக அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது புதிய அதிபராக தேர்வாகியுள்ள 60 வயதான யூன் சுக்-யோல், 1994-ல் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் ஒரு சாதாரண வழக்கறிஞராகத் தனது வாழக்கையைத் தொடங்கினார்.

தென் கொரியாவின் புதிய அதிபர் யூன் சுக்-யோல்
தென் கொரியாவின் புதிய அதிபர் யூன் சுக்-யோல்

பின்னர் படிப்படியாக உயர்ந்து, ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்புப் பிரிவு மற்றும் மத்திய புலனாய்வு துறையின் தலைவரானார். அதையடுத்து 2013-ம் ஆண்டில், தேசிய புலனாய்வு சேவையின் (NIS) தொடர்பு குறித்து ஆராயும் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவிற்கும் யூன் சுக்-யோல் தலைமைத் தாங்கினார்.

2016-ல் சாம்சங் துணைத் தலைவர் லீ ஜே-யோங் மற்றும் அப்போதைய ஜனாதிபதி பார்க் கியூன்-ஹே ஆகியோர் சம்பந்தப்பட்ட ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்த யங்-சூவின் சிறப்பு வழக்கறிஞர் குழுவில் யூன் சுக்-யோல் தலைவராக இருந்தார். இந்த விசாரணையானது டிசம்பர் 2016-ல் ஜனாதிபதியின் பதவி நீக்கத்திற்கே வழிவகுத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தென் கொரியாவின் புதிய அதிபர் யூன் சுக்-யோல்
தென் கொரியாவின் புதிய அதிபர் யூன் சுக்-யோல்

இதையடுத்து 2017-ல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மூன் ஜே-இன், யூன் சுக்-யோலை சியோல் மத்திய மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தின் தலைவராக நியமித்தார். பின்னர் 2020-ல் யூன் சுக்-யோல் மீது நெறிமுறை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் என குற்றம்சாட்டப்பட்டு, நீதி அமைச்சர் சூ மி ஏ-வால், யூன் சுக்-யோல் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டார். அதையடுத்து பலகட்ட நீதிமன்ற போராட்டங்களுக்குப் பிறகு நீதிமன்றத்தால் யூன் சுக்-யோல் பதவி இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது.

தென் கொரியா அதிபர் தேர்தலில் மக்கள் சக்தி கட்சி வெற்றி
தென் கொரியா அதிபர் தேர்தலில் மக்கள் சக்தி கட்சி வெற்றி

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் 4-ல் யூன் சுக்-யோல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இப்படி தன் வாழ்நாளில் ஏற்றத்தாழ்வுகளைக் கண்ட யூன் சுக்-யோலை, இந்த ஆண்டு நடைபெற்ற தென் கொரிய அதிபர் தேர்தலில் மக்கள் சக்தி கட்சி அதிபர் வேட்பாளராக அறிவித்தது. இப்போது வெற்றியும் கண்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism