Published:Updated:

அமெரிக்கா: `வால்மார்ட்டை தகர்க்கப்போகிறேன்’ - திருடிய விமானத்தில் வானில் வட்டமிட்ட இளைஞர் | Video

வால்மார்ட்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்மார்ட் நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்கா: `வால்மார்ட்டை தகர்க்கப்போகிறேன்’ - திருடிய விமானத்தில் வானில் வட்டமிட்ட இளைஞர் | Video

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்மார்ட் நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Published:Updated:
வால்மார்ட்

அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணத்தில் பிரபல வால்மார்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த வால்மார்ட் நிறுவனத்தை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக விமானி ஒருவர் மிரட்டல் விடுத்தபடி வானில் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வெளியான முதற்கட்ட தகவலின் படி, அமெரிக்காவின் மிஸிசிப்பி நகரில் இருந்து சிறிய ரக விமானத்தை திருடிச் சென்ற 29 வயது நபர் வால்மார்ட்டை விமானத்தைக் கொண்டு தகர்க்கப் போவதாக மிரட்டியபடி வானில் வலம் வந்து கொண்டிருந்தார்.

வால்மார்ட் மற்றும் அதனையொட்டிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொது மக்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த விமானம் தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைந்திருக்கும் பகுதிகளுக்கும் மேல் பறந்ததால் போலீஸார் விமானக் கடத்தல்காரருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்மார்ட் நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் வால்மார்ட் அங்காடியை சுற்றி உள்ள பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்தினர்.

இந்த நிலையில் நீண்ட போராட்டத்துக்குப்பின்னர் அந்த விமானி எரிபொருள் தீரும் நிலையில் மிஸிசிப்பி வயலில் தரையிறக்கினார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்தினால் தான் இந்த மிரட்டலுக்கு காரணம் தெரிய வரும்!