Published:Updated:

"பிரதமர் மோடி கூறியது சரிதான்...” - பாராட்டிய அமெரிக்கக் கருவூலச் செயலாளர் ஜேனட் யெல்லன்!

ஜேனட் யெல்லன் ( ட்விட்டர் )

``இந்தியாவும் அமெரிக்காவும் அடுத்த ஆண்டில் எங்களின் நடவடிக்கையின் மூலம் அவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க விரும்புகிறோம்." - ஜேனட் யெல்லன் (Janet Yellen )

"பிரதமர் மோடி கூறியது சரிதான்...” - பாராட்டிய அமெரிக்கக் கருவூலச் செயலாளர் ஜேனட் யெல்லன்!

``இந்தியாவும் அமெரிக்காவும் அடுத்த ஆண்டில் எங்களின் நடவடிக்கையின் மூலம் அவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க விரும்புகிறோம்." - ஜேனட் யெல்லன் (Janet Yellen )

Published:Updated:
ஜேனட் யெல்லன் ( ட்விட்டர் )

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவிலுள்ள மைக்ரோசாஃப்ட் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமெரிக்க கருவூலச் செயலாளர் ஜேனட் யெல்லன் (Janet Yellen), உரையாற்றினார். அப்போது, "அமெரிக்காவும் இந்தியாவும் இயற்கையான கூட்டாளிகள். பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் போர் இருந்தபோதிலும், தங்கள் குடிமக்களுக்கு வழங்கவேண்டிய உரிமைகளை ஜனநாயக நாட்டால் வழங்க முடியும் என்பதற்கு இரு நாடுகளும் எடுத்துக்காட்டாகும்.

ஜேனட் யெல்லன் (Janet Yellen)
ஜேனட் யெல்லன் (Janet Yellen)
ட்விட்டர்

சுதந்திரம் அடைவதற்கு இரு நாடுகளும் ஒரே மாதிரியான போராட்டங்களை நடத்தியிருக்கின்றன. உலகெங்கிலுமுள்ள மக்கள், 'ஜனநாயகம் தங்கள் குடிமக்களின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியுமா... கொடுமைப்படுத்துபவர்களுக்கு எதிராக நிற்க முடியுமா... மிகவும் தீர்க்க முடியாத உலகளாவிய பிரச்னைகளில் ஒத்துழைக்க முடியுமா?' என எங்களைப் பார்த்து கேட்கிறார்கள். இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளாக, இந்தியாவும் அமெரிக்காவும் அடுத்த ஆண்டில் எங்களின் நடவடிக்கையின் மூலம் அவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க விரும்புகிறோம்.

அப்போதுதான் மக்களுக்கான நமது ஜனநாயகத்தின் திறனை நிரூபிக்க முடியும். அதில் நாங்கள் வெற்றிபெறுவோம் என்று நம்புகிறேன். அடுத்த ஆண்டு 20 பெரிய பொருளாதாரக் குழுக்களில், பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கான முதலீடுகளை அதிகரிப்பதற்கும், ஏழை நாடுகளுக்கான கடன்களை மறுகட்டமைப்பதில் உள்ள தடையை உடைப்பதற்கும், டிஜிட்டல் அணுகலை மேம்படுத்துவதற்கும் நாடுகளின் முன்னுரிமைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பது உட்பட பல இலக்குகள் இந்தியாவின் தலைமைக்காக இருக்கின்றன.

ஜேனட் யெல்லன் (Janet Yellen)
ஜேனட் யெல்லன் (Janet Yellen)
ட்விட்டர்

இந்தியாவின் ஜி 20 ஆண்டு, கடன் மறுசீரமைப்பில் உலகளாவிய ஒருங்கிணைப்பை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பாகும். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது ஒரு தார்மிகக் கட்டாயம். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி இது போர்க்காலம் அல்ல... பேச்சுவார்த்தையின் மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும் எனக் கூறியது சரிதான்" எனத் தெரிவித்திருக்கிறார்.