Published:Updated:

நெதர்லாந்து: நான்காவது முறையாக பிரதமரானார் மார்க் ரூடே!

மோடி - மார்க் ரூடே!
News
மோடி - மார்க் ரூடே!

பிரதமர் நரேந்திர மோடி, நெதர்லாந்தின் பிரதமராக நான்காவது முறையாகப் பதவியேற்றிருக்கும் மார்க் ரூடேவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நெதர்லாந்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அரசு மூலம் கடந்த திங்கட்கிழமை அன்று நான்காவது முறையாக மார்க் ரூடே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மோடி ட்வீட்
மோடி ட்வீட்

அதைத் தொடர்ந்து, மார்க் ரூடேவுக்கு வாழ்த்து தெரிவிக்கும்விதமாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், `வெற்றிகரமாக நான்காவது முறை பிரதமராகப் பதவியேற்றிருக்கும் அருமை நண்பர் பிரதமர் மார்க் ரூடேவுக்கு வாழ்த்துகள். நம்முடைய பரந்த நல்லுறவின் மூலம் இந்தியா மற்றும் நெதர்லாந்தைப் பல புதிய உயரங்களுக்கு நிச்சயம் நாம் கொண்டு செல்வோம்' என ட்வீட் செய்திருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிரதமர் மார்க் ரூடே
பிரதமர் மார்க் ரூடே

2010-ல் தொடங்கி தற்போது நான்காவது முறையாகப் பிரதமராக பதவியேற்றுள்ள மார்க் ரூடே, நெதர்லாந்து வரலாற்றிலேயே இரண்டாவது இளம் பிரதமராவார். இவர் பிரதமராகப் பதவியேற்ற பின்னரும்கூட இன்று வரை ஜோகன் டி விட் கல்லூரியில் வாரத்தில் இரண்டு மணி நேரம் மாணவர்களுக்கு சமூகம் சார்ந்த பாடங்களை எடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.