Published:Updated:

ஓராண்டில் 12,000 முறை... போலீஸுக்கு போன்செய்து திட்டிய பெண் கைது - என்ன நடந்தது?

போன்செய்து திட்டிய பெண் கைது

அந்தப் பெண் இதுவரை 12,512 முறை அவசர உதவி எண்ணுக்கு தொடர்புகொண்டு அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.

ஓராண்டில் 12,000 முறை... போலீஸுக்கு போன்செய்து திட்டிய பெண் கைது - என்ன நடந்தது?

அந்தப் பெண் இதுவரை 12,512 முறை அவசர உதவி எண்ணுக்கு தொடர்புகொண்டு அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.

Published:Updated:
போன்செய்து திட்டிய பெண் கைது

இந்தியாவில் அவசர உதவி தேவைப்படுவோருக்காக மத்திய அரசின் `அவசர உதவி' திட்டம் நடைமுறையில் இருக்கிறது. `112' என்ற அவசர உதவி எண்ணை தேவைப்படுவோர் தொடர்புகொள்ளலாம். இந்தியாவைப் போல பல நாடுகளிலும் இப்படி அவசரகால சேவை நடைமுறையில் இருக்கிறது. அந்த வகையில், அமெரிக்காவில் அவசரகால உதவிகளுக்கு `911' என்ற எண் நடைமுறையில் இருக்கிறது.

போன்
போன்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கார்லா ஜெபர்சன் (51 வயது) என்ற பெண் `911' என்ற அவசர எண்ணை தொடர்புகொண்டு அதிகாரிகளை மிகவும் இழிவாகப் பேசியிருக்கிறார். அந்தப் பெண் இதுவரை 12,512 முறை அவசர உதவி எண்ணுக்கு தொடர்புகொண்டு அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இந்த நிலையில், அந்தப் பெண்ணை புளோரிடா காவல்துறையினர் கைதுசெய்திருக்கின்றனர்.

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய செயின்ட் பீட்டர்ஸ்பர்க் காவல்துறை செய்தித் தொடர்பாளர், ``கார்லா ஜெபர்சன் என்ற பெண் இந்த ஆண்டு மட்டும் `911' என்ற அவசர எண்ணுக்கு குறைந்தது 12,512 முறை அழைப்பு விடுத்து, அதிகாரிகளை துன்புறுத்தும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் பேசியிருக்கிறார். மேலும் அவர் ஒருமுறை 24 மணி நேர இடைவெளியில் 512 முறை அழைப்பு விடுத்து, கொச்சையாக ஆபாசமாகப் பேசியிருக்கிறார்.

கைது
கைது
சித்திரிப்புப் படம்

காவலர்களை ஆபாசமாகப் பேசியக் குற்றத்துக்காகவும், காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்துக்காகவும் அவரைக் கைதுசெய்திருக்கிறோம். மேற்கொண்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றோம்" என்றார்.

911 என்ற அவசரகால உதவி எண்ணை தவறாகப் பயன்படுத்தியதற்காக ஜெபர்சன்மீது மூன்று வழக்குகள் பதியப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.