அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலிருக்கும் தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயது இளைஞர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 19 குழந்தைகள், இரண்டு ஆசிரியர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின், ஓக்லஹோமா மாகாணத்தின் துல்சா நகர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், பொதுமக்கள் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இப்படியாக... அண்மைக்காலமாக அமெரிக்காவில் துப்பாக்கிசூடு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கிகள் வாங்குவதற்கான நடைமுறைகளைக் கடுமையாக்கத் திட்டமிட்டிருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜோ பைடன், ``அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாசாரம் அதிகரித்துவருவது கவலையளிக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது போன்ற சம்பவங்களைத் தடுக்க அமெரிக்காவில் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும். துப்பாக்கி உரிமம் பெறுவதற்கான வயது வரம்பை 18-லிருந்து 21-ஆக உயர்த்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும். நாம் இன்னும் எத்தனை படுகொலைகளை ஏற்கத் தயாராக இருக்கிறோம்?'' என்றார்.