Published:Updated:

``எரிவாயுவை ஆயுதமாகப் பயன்படுத்துகிறதா ரஷ்யா?” - மறுக்கும் அதிபர் புதின்

புதின்

ரஷ்யா, எரிசக்தியை அச்சுறுத்தலாகப் பயன்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டியுள்ளது. எனினும், புதின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்.

ரஷ்யா உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி போர் தொடுத்தது. ரஷ்யாவின் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்திருந்தன. இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை காத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

``எரிவாயுவை ஆயுதமாகப் பயன்படுத்துகிறதா ரஷ்யா?” - மறுக்கும் அதிபர் புதின்

தற்போது ஐரோப்பாவுக்குக் குழாய் வழியாகச் செல்லும் இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தியிருக்கும் நிலையில், ரஷ்யா தனது ஆற்றலை ஆயுதமாக மாற்றுகிறது என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (7-9-22) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பசிபிக் துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக்கில் நடந்த கிழக்கத்திய பொருளாதார மன்றத்தில் இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, ``ரஷ்யா எரிவாயு ஆற்றலை ஓர் ஆயுதமாக பயன்படுத்துகிறது என்று அவர்கள் (ஐரோப்பிய யூனியன்) கூறுகிறார்கள். இது முட்டாள்தனம். நாங்கள் எங்கே ஆயுதத்தைப் பயன்படுத்துகிறோம்... கோரிக்கைகளுக்கு ஏற்ப தேவையான இயற்கை எரிவாயுவை வழங்குகிறோம்” என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் எரிவாயு நிறுவனமான Gazprom கடந்த வெள்ளிக்கிழமை (2-9-22) கூறுகையில், ``மூன்று நாள்கள் பராமரிப்புக்கு பிறகு நார்த் ஸ்ட்ரீம் குழாய் வார இறுதியில் மீண்டும் திறக்கப்படவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், பழுதுபார்க்கும் பணிகள் முடிவடையும் வரை மூடப்பட்டிருக்கும்” என்றது.

``எரிவாயுவை ஆயுதமாகப் பயன்படுத்துகிறதா ரஷ்யா?” - மறுக்கும் அதிபர் புதின்
Sergei Bobylev

``டர்பைன் பழுது பார்க்கப்பட்டுவருவதால், அதைத் திரும்பப் பெற பல தடைகள் இருக்கின்றன” என ரஷ்யா கூறுகிறது.

மேலும் புதின் ``ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குக் கிடைக்கும் நன்மைகளை விட்டுக்கொடுக்க விரும்பினால், அது அவர்கள் பொறுப்பு. எந்த நாட்டுடனும் ஒத்துழைக்க ரஷ்ய தயாராக உள்ளது” என்றும் அவர் கூறினார்.

``எரிவாயுவை ஆயுதமாகப் பயன்படுத்துகிறதா ரஷ்யா?” - மறுக்கும் அதிபர் புதின்

உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடந்து ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதற்குப் பிறகு, ரஷ்யா பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கான எரிசக்தி விநியோகத்தைக் குறைத்திருக்கிறது (நிறுத்தியுள்ளது) எனக் கூறப்படுகிறது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு விலை உயர்ந்திருக்கிறது.