Published:Updated:

ஒசாமா பின் லேடன் குடும்பத்தினரிடமிருந்து நன்கொடை பெற்றாரா இளவரசர் சார்லஸ்?! - வெளியான பரபரப்பு தகவல்

ஒசாமா பின் லேடன் - இளவரசர் சார்லஸ்

இளவரசர் சார்லஸ் தன்னுடைய அறக்கட்டளைக்கு ஒசாமா பின் லேடனின் குடும்பத்தினரிடமிருந்து 1 மில்லியன் பவுண்ட் நன்கொடை பெற்றதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஒசாமா பின் லேடன் குடும்பத்தினரிடமிருந்து நன்கொடை பெற்றாரா இளவரசர் சார்லஸ்?! - வெளியான பரபரப்பு தகவல்

இளவரசர் சார்லஸ் தன்னுடைய அறக்கட்டளைக்கு ஒசாமா பின் லேடனின் குடும்பத்தினரிடமிருந்து 1 மில்லியன் பவுண்ட் நன்கொடை பெற்றதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
ஒசாமா பின் லேடன் - இளவரசர் சார்லஸ்

ராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் பிலிப்பின் மூத்த மகனான வேல்ஸ் இளவரசர் சார்லஸ் தன்னுடைய அறக்கட்டளைக்கு ஒசாமா பின் லேடனின் குடும்பத்தினரிடமிருந்து 1 மில்லியன் பவுண்ட் நன்கொடை பெற்றதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

சவுதி அரேபியாவின் பெரும் பணக்காரர்களான பக்ர் பின் லேடன் (Bakr Bin Laden) அவர் சகோதரர் ஷபிக் ஆகியோர், அல்-கொய்தாவின் நிறுவனர் ஒசாமா பின் லேடனின் பெரியப்பா- சித்தப்பா மகன்களாவர். இவர்கள் இருவரும் தி பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்-ன் அறக்கட்டளைக்கு நிதி நன்கொடை வழங்கியதாகவும் அதை இளவரசர் சார்லஸ் ஏற்றுக்கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

பிரின்ஸ் சார்லஸ்
பிரின்ஸ் சார்லஸ்

ஆனால் பக்ர், ஷபிக் பின் லேடன் மற்றும் அவர்களின் மற்ற குடும்ப உறுப்பினர்கள், பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி செய்ததாகவோ அல்லது அதில் ஈடுபட்டதாகவோ எந்த ஆதாரமும் இதுவரை இல்லை எனச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் `தி பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்' அறக்கட்டளை, ``30 அக்டோபர் 2013 அன்று கிளாரன்ஸ் ஹவுஸில் பக்ருடன் ஒரு தனிப்பட்ட சந்திப்புக்குப் பிறகு சார்லஸ் நன்கொடையை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டார். மேலும், நன்கொடையை ஏற்றுக்கொள்வதற்கான முடிவு அறக்கட்டளையின் அறங்காவலர்களால் மட்டுமே எடுக்கப்பட்டது. எனவே, இதை வேறுவிதமாக வகைப்படுத்தும் தற்போதைய முயற்சிகள் அனைத்தும் தவறானவை" எனத் தெரிவித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!