Published:Updated:

``ராணியின் இறுதிச்சடங்கில் தேசியகீதம் பாடவில்லை!" - இளவரசர் ஹாரி மீதெழும் விமர்சனங்கள்

இளவரசர் ஹாரி மீதெழும் விமர்சனங்கள்

'God Save The King' என்ற இங்கிலாந்து தேசியகீதம் பாடப்பட்டு ராணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது இளவரசர் ஹாரி அரச குடும்பத்துடன் இணைந்து தேசியகீதத்தைப் பாடவில்லை என்று கூறப்படுகிறது.

``ராணியின் இறுதிச்சடங்கில் தேசியகீதம் பாடவில்லை!" - இளவரசர் ஹாரி மீதெழும் விமர்சனங்கள்

'God Save The King' என்ற இங்கிலாந்து தேசியகீதம் பாடப்பட்டு ராணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது இளவரசர் ஹாரி அரச குடும்பத்துடன் இணைந்து தேசியகீதத்தைப் பாடவில்லை என்று கூறப்படுகிறது.

Published:Updated:
இளவரசர் ஹாரி மீதெழும் விமர்சனங்கள்

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இந்த மாத தொடக்கத்தில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட எலிசபெத் ராணி கடந்த 8-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த சில நாள்களாக லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பல்வேறு நாட்டின் தலைவர்களும் லண்டனில் முகாமிட்டு இறுதி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அரச பாரம்பர்ய முறைப்படி, சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள் யாருமின்றி ராணி எலிசபெத் உடல், மறைந்த அவர் கணவர் இளவரசர் பிலிப்பின் உடல் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக பிரிட்டன் நேரப்படி இரவு 7:30 மணியளவில் மன்னர் சார்லஸ் மற்றும் அரசு குடும்பத்தினர் தேவாலயத்துக்கு வருகை தந்தனர். அப்போது, 'God Save The King' என்ற இங்கிலாந்து தேசியகீதம் பாடப்பட்டு ராணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட இளவரசர் ஹாரி அரச குடும்பத்துடன் இணைந்து தேசியகீதத்தைப் பாடவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒரு வீடியோ கிளிப்பும், ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் இளவரசர் ஹாரியை விமர்சித்து வருகின்றனர். தொடர்ந்து இளவரசர் ஹாரிமீது குற்றச்சாட்டுகள் வரக் காரணம், பிரிட்டன் அரச குடும்பத்தின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் அறிவித்ததே எனக் கூறப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இளவரசர் ஹாரி, அவர் மனைவி மேகன் மார்க்கல்
இளவரசர் ஹாரி, அவர் மனைவி மேகன் மார்க்கல்
ட்விட்டர்

தற்போது இளவரசர் ஹாரி, அவர் மனைவி மேகன் மார்க்கல் ஆகியோர் தங்கள் மகனுடன் அமெரிக்காவில் குடியேறிவிட்டனர். அடிப்படையில், ஹாரியும், மேகன் மார்க்கலும் இன்னமும் அரச குடும்பத்தின் உறுப்பினர்களாக தொடர்ந்தாலும், கடந்த மாதம் இவர்கள் இருவரும் அரசு குடும்ப உறுப்பினர்களுக்கான பொறுப்புகளிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக மறைந்த பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் அறிக்கையொன்றின் மூலம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.