Published:Updated:

`அரச குடும்பத்திலிருந்து வெளியேறுகிறோம்!’ - இங்கிலாந்து ராணிக்கு அதிர்ச்சி கொடுத்த இளவரசர்

இளவரசர் ஹாரி -மேகன்
இளவரசர் ஹாரி -மேகன்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகன் ஆகியோர் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நடிகை மேகனும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். அந்த விஷயம் இருவரின் வீடுகளுக்கும் தெரியவர அரச முறைப்படி கடந்த 2018-ம் ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு இருவரும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஏழை மக்களுக்கு உதவுவது, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது எனப் பிஸியாக இருந்து வருகின்றனர்.

ஹாரி -மேகன்
ஹாரி -மேகன்

இங்கிலாந்தைப் பொறுத்தவரை அரசு எடுக்கும் முக்கிய முடிவுகளில் அரச குடும்பத்தின் பங்கும் இருக்கும். அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அரசின் ஓர் அங்கமாகவே கருதப்படுகிறார்கள். இந்தச் சூழலில் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர் ஹாரி - மேகன் தம்பதி. இங்கிலாந்து அரசு மற்றும் அதிகாரம் மீது ஹாரி பற்றில்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், `பல மாத ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த வருடத் தொடக்கத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளோம். நாங்கள் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகவுள்ளோம். சுதந்திரமாக வேலை செய்ய நினைக்கிறோம். அதேநேரம் இங்கிலாந்து அரசுக்கும் ராணிக்கும் தேவையான எங்களது உதவிகள் தொடரும். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த விஷயத்தைச் செய்ய நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், தற்போது நாங்கள் முடிவெடுத்துவிட்டோம்.

அரசக் குடும்பம்
அரசக் குடும்பம்

இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்காவில் எங்களின் நேரத்தைச் சமமாகச் செலவிடத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் புவியியல் சமநிலை எங்கள் மகனை, அவர் பிறந்த அரச பாரம்பர்யத்தைப் பற்றிய புரிதலுடன் வளர்க்க உதவும். அதேநேரம் இந்த முடிவு எங்கள் குடும்பத்துக்கு அதிகக் கவனம் செலுத்துவதற்கான இடத்தையும் வழங்குகிறது. ராணி, காமன்வெல்த் மற்றும் எங்கள் ஆதரவாளர்களுக்காக வேலை செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

`அன்று, என் அம்மா டயானாவை இழந்தேன்; இன்று என் மனைவியைக் குறிவைக்கிறார்கள்!' - இளவரசர் ஹாரி

நாங்கள் புதிய தொண்டு நிறுவனம் தொடங்கவுள்ளோம். எங்களின் இந்த அற்புதமான அடுத்த கட்டத்தின் முழு விவரங்களையும் சரியான நேரத்தில் பகிர்ந்துகொள்வோம். நாங்கள், இங்கிலாந்து ராணி, வேல்ஸ் இளவரசர், கேம்பிரிட்ஜ் டியூக் மற்றும் அனைத்துக் கட்சிகளுடனும் ஒத்துழைக்கிறோம். இதுவரை எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எங்களின் நன்றிகள்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இளவரசன் ஹாரியின் இந்தத் திடீர் அறிவிப்பு இங்கிலாந்து மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. மேலும், இவர்கள் இங்கிலாந்து ராணியிடம்கூட ஆலோசனை நடத்தாமல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

View this post on Instagram

“After many months of reflection and internal discussions, we have chosen to make a transition this year in starting to carve out a progressive new role within this institution. We intend to step back as ‘senior’ members of the Royal Family and work to become financially independent, while continuing to fully support Her Majesty The Queen. It is with your encouragement, particularly over the last few years, that we feel prepared to make this adjustment. We now plan to balance our time between the United Kingdom and North America, continuing to honour our duty to The Queen, the Commonwealth, and our patronages. This geographic balance will enable us to raise our son with an appreciation for the royal tradition into which he was born, while also providing our family with the space to focus on the next chapter, including the launch of our new charitable entity. We look forward to sharing the full details of this exciting next step in due course, as we continue to collaborate with Her Majesty The Queen, The Prince of Wales, The Duke of Cambridge and all relevant parties. Until then, please accept our deepest thanks for your continued support.” - The Duke and Duchess of Sussex For more information, please visit sussexroyal.com (link in bio) Image © PA

A post shared by The Duke and Duchess of Sussex (@sussexroyal) on

ஹாரியின் முடிவு பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள பக்கிங்காம் அரச குடும்பம், `ஹாரி மற்றும் மேகனுடான எங்கள் பேச்சுவார்த்தை முதல்கட்டத்திலேயே உள்ளது. மாறுபட்ட சூழலில் வாழ வேண்டும் என்ற அவர்களின் ஆசையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், இது நிறைய சிக்கலைத் தரும். இதைச் செயல்படுத்துவதற்கு நிறைய காலம் எடுக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது இவர்கள் அரச குடும்ப முறைப்படி கொண்டாடாமல், கனடாவில் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தான் அரசக் குடும்பத்தில் இருப்பதால்தான் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருவதாகவும் ஹாரி முன்னதாக தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு