Published:Updated:

அமெரிக்கா, கனடாவை தொடர்ந்து நியூசிலாந்திலும் வலுக்கும் தடுப்பூசிக்கு எதிரான போராட்டம்!

போராட்டக்காரர்கள் , நியூசிலாந்து ( ட்விட்டர் )

பைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 3 நபர்கள் இதய தசை வீக்கம் காரணமாகக் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்ததாக அந்த நாட்டின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் தெரிவித்தது.

அமெரிக்கா, கனடாவை தொடர்ந்து நியூசிலாந்திலும் வலுக்கும் தடுப்பூசிக்கு எதிரான போராட்டம்!

பைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 3 நபர்கள் இதய தசை வீக்கம் காரணமாகக் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்ததாக அந்த நாட்டின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் தெரிவித்தது.

Published:Updated:
போராட்டக்காரர்கள் , நியூசிலாந்து ( ட்விட்டர் )

கொரோனா முதலாம் அலையின்போது உலகளவில் முதல் நாடாக `ஜீரோ கோவிட்' என்ற இலக்கை எட்டியது நியூசிலாந்து. இதற்காக அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா சர்வதேச அளவில் கவனம் பெற்றார். ஆனால், அதற்குப்பின்பு கொரோனா, ஒமிக்ரான் எனத் தொடர்ந்து தடுமாறி வருகிறது நியூசிலாந்து.

அந்த நாட்டில் மக்களுக்கு அமெரிக்கத் தயாரிப்பான பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 3 நபர்கள் இதய தசை வீக்கம் காரணமாகக் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்ததாக அந்த நாட்டின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் தெரிவித்தது.

போராட்டக்காரர்கள் , நியூசிலாந்து
போராட்டக்காரர்கள் , நியூசிலாந்து
ட்விட்டர்

இந்த நிலையில் உணவு விடுதிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், அலுவலகங்களுக்குச் செல்ல கொரோனா தடுப்பூசி கட்டாயம் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து நியூசிலாந்து மக்களில் ஒரு பகுதியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

``கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு எதிரான எங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திரும்பக் கொடுங்கள். வற்புறுத்துதல் என்பது சம்மதம் அல்ல" என்று முழக்கமிட்டபடி வெலிங்டனில் உள்ள நியூசிலாந்து பாராளுமன்ற பகுதியில் போராடி வருகின்றனர்.

மக்கள் போராட்டம் அமைதியாக நடந்து வருவதால், இதுவரை கைது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்
பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்

இது தொடர்பாகப் பிரதமர் ஜெசிந்தா கூறுகையில், ``நியூசிலாந்தில் 96 சதவிகித மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். எனவே இது கூடுதல் பாதுகாப்பை வழங்கியதால் இப்போது குறைவான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறோம். பெரும்பாலான நியூசிலாந்து மக்கள் கொரோனா விதிமுறைகளை ஆதரிக்கிறார்கள்" என்றார்.

ஆனால் போராட்டக்காரர்கள், ``இங்கு இருப்பவர்களில் பெரும்பாலனவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தான். ஆனால், கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொண்டாக வேண்டும் என நிர்பந்திப்பதை எங்களால் ஏற்கமுடியாது" எனத் தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிலும் மக்கள் கொரோனா தடுப்பூசி மற்றும் கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism