Published:Updated:

`தென் அமெரிக்கக் கண்டத்தின் புதிய சோதனை!'- பொலிவியாவையும் விட்டுவைக்காத கலவரம்

பொலிவியாவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் போது ஏற்பட்ட குளறுபடியால் நாடு முழுவதும் கலவரம் வெடித்தது.

பொலிவியா போராட்டம்
பொலிவியா போராட்டம்

பொலியாவில் கடந்த மாதம் 20-ம் தேதி அதிபர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் சோசியலிச இயக்கத்தின் சார்பில் தொடர்ந்து மூன்றுமுறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈவா மோர்ல்ஸும், புரட்சிகர இடதுசாரி முன்னணி சார்பாக முன்னாள் அதிபர் கார்லோஸ் மேசாவும் போட்டியிடுகின்றனர். பொலிவியாவின் அரசியல் சாசன சட்டப்படி, பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர், 50 சதவிகித வாக்குகளைப்பெற்றிருக்கவேண்டும்.

காவல்துறை
காவல்துறை

அப்படியில்லையென்றால் இரண்டாம் இடத்தில் இருப்பவர்களைக்காட்டிலும் கூடுதலாக 10% வாக்குகளைப்பெற்றிருக்கவேண்டும் என்பதுதான் சட்டம். அப்படி வாக்குகள் தவறும்பட்சத்தில் அடுத்த சுற்று வாக்கெடுப்பு நடைபெறும். தற்போது நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதல்கட்டமாக 84% சதவிகிதம் வாக்குகள் எண்ணப்பட்டிருந்தன. முந்தைய தேர்தல்களில் முதல் சுற்றிலே 50 சதவிகிதம் வாக்குகளைப்பெற்ற ஈவா மோர்லேஸ், இம்முறை 45.3 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப்போட்டியிட்ட கார்லோஸ் மேசா 38.2 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தொடர்ச்சியாக முன்னிலை குறித்தான அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்த பொலிவியாவின் தேர்தல் அமைப்பு திடீரென்று அதை நிறுத்தி வைத்தது. இதையறிந்த மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டது. பல மணிநேரத்திற்குப் பிறகு 95% வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டதாகவும் ஈவா கார்லோஸ் 46.41% பெற்று வெற்றிக்கு மிக அருகில் இருப்பதாகவும், மேசா 37.06% சதவிகிதமும் பெற்றுள்ளதாக தேர்தல் அமைப்பு தெரிவித்தது.

பொலி
பொலி

இருப்பினும் அந்நாட்டின் தலைநகரான சுகிறேவில் (Sucre) நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவியுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லாததும், ஒருதலைபட்சமாகச் செயல்படும் தேர்தல் அமைப்புமே இப்போராட்டத்திற்குக் காரணமென்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவிவருகிறது. இதைக் குறித்து லத்தீன் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பும், ஐரோப்பிய ஒன்றியமும் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொலிவியாவின் அண்மை நிகழ்வுகள் ஜனநாயகத்தன்மைமீதும் அதன் அமைதியையும் கேள்விக்குள்ளாகியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர். சிலி, வெனிசுலா முதலிய லத்தீன் அமெரிக்க நாடுகளைத் தொடர்ந்து பொலிவியாவில் நடைபெற்று வரும் போராட்டம் தென் அமெரிக்கக் கண்டத்தின் அரசியல் உறுதித்தன்மைக்குப் புதியதொரு சோதனையாக உருவெடுத்துள்ளது.