Published:Updated:

தென்ஆப்பிரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி சிறுமி; போராட்டத்தில் உறவினர்கள்... என்ன நடந்தது?!

தென் ஆப்பிரிக்கா காவல்நிலையம் ( ட்விட்டர் )

தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி கடத்தப்பட்டு 10 நாள்கள் கடந்தும், இன்னும் கண்டுபிடிக்கப்படாததைக் கண்டித்து அந்தப் பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

தென்ஆப்பிரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி சிறுமி; போராட்டத்தில் உறவினர்கள்... என்ன நடந்தது?!

தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி கடத்தப்பட்டு 10 நாள்கள் கடந்தும், இன்னும் கண்டுபிடிக்கப்படாததைக் கண்டித்து அந்தப் பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

Published:Updated:
தென் ஆப்பிரிக்கா காவல்நிலையம் ( ட்விட்டர் )

தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் 8-வயது இந்திய வம்சாவளி சிறுமி கடத்தப்பட்டு 10 நாள் கடந்தும் இன்னும் கண்டுபிடிக்கப்படாததைக் கண்டித்து அந்தப் பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

ரைலண்ட்ஸ் ஆரம்பப் பள்ளியில் படித்து வருபவர் அபிரா தேக்தா. இவருடைய தந்தை இந்தியாவிலிருந்து கேப்டவுனில் குடியேறியவர். இவர் அங்கு மொபைல் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி அபிரா தேக்தா பள்ளி முடிந்ததும், தன் தோழிக்காக வெளியே காத்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அடையாளம் தெரியாத சிலர் பள்ளி வாகனத்தில் வந்து அந்தச் சிறுமியை கடத்தி சென்றிருக்கின்றனர். இதைப் பார்த்த பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். காவல்துறையும் சிறுமியை தேடி வருவதாக கூறப்படுகிறது.

கடத்தல்
கடத்தல்
சித்திரிப்புப் படம்

ஆனால், குழந்தை கடத்தப்பட்டு 10 நாள்களை கடந்தும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், அத்லோனில் உள்ள காவல் நிலையத்துக்கு அணிவகுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தையை மீட்டு, கடத்தல் காரர்களை கைது செய்யக் கோரி கோஷமிட்டனர். ரைலண்ட்ஸ் பள்ளியில் படிக்கும் சக மாணவர்களும் பள்ளி வளாகத்திலேயே அமைதியான முறையில் கோஷமிட்டபடி போராட்டம் நடத்தினர்.

தென் ஆப்பிரிக்கா காவல்துறை
தென் ஆப்பிரிக்கா காவல்துறை
ட்விட்டர்

இந்தநிலையில், இந்த வழக்கின் தன்மை மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் ஆபத்து காரணமாக தென்னாப்பிரிக்க காவல்துறை மற்றும் ஹாக்ஸ் விசாரணைப் பிரிவு ஆகிய இரண்டும் இது பற்றிய எந்த தகவலையும் வழங்க மறுத்துவிட்டதாக் கூறப்படுகிறது.