Published:Updated:

உக்ரைன் மக்களுக்கு ரஷ்ய குடியுரிமை... விரைவாக வழங்க மும்முரம் காட்டும் புதின்?!

ரஷ்ய அதிபர் புதின் ( ட்விட்டர் )

தற்போது குடியுரிமை வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி உக்ரைனில் வாழும் அனைத்து மக்களுக்கும் ரஷ்யக் குடியுரிமை விரைவாக வழங்கும் ஆணையில் ரஷ்ய அதிபர் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் மக்களுக்கு ரஷ்ய குடியுரிமை... விரைவாக வழங்க மும்முரம் காட்டும் புதின்?!

தற்போது குடியுரிமை வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி உக்ரைனில் வாழும் அனைத்து மக்களுக்கும் ரஷ்யக் குடியுரிமை விரைவாக வழங்கும் ஆணையில் ரஷ்ய அதிபர் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
ரஷ்ய அதிபர் புதின் ( ட்விட்டர் )

உக்ரைனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷ்யா கடந்த 150 நாள்களாக முயற்சித்துவருகிறது. உக்ரைன்- ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய யுத்தம் இன்னும் தொடர்கிறது. இருநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் இந்தப் போரில் இறந்திருக்கின்றனர். போர் தொடர்ந்துகொண்டிருப்பதால் உக்ரைன் குடிமக்கள் தங்கள் உடைமைகளைத் துறந்துவிட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

உக்ரைன்
உக்ரைன்

இந்த நிலையில், உக்ரைன் குடிமக்கள் அனைவருக்கும் ரஷ்யக் குடியுரிமை வழங்குவதற்கான ஆணையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில், ரஷ்யாவின் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான மற்றொரு முயற்சியாக புதின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்னரே, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பிராந்தியங்களில் உள்ள உக்ரைனியர்கள், எளிதில் ரஷ்ய குடியுரிமையைப் பெறுவதற்கான விரைவு குடியுரிமை திட்டத்தைக் கடந்த 2019-ம் ஆண்டு ரஷ்ய அரசு அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
புதின்
புதின்

அதன் தொடர்ச்சியாகவே உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த மே மாதம் மேற்கு உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா மற்றும் கெர்சன் பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களும் ரஷ்யக் குடியுரிமையை எளிதில் பெறும் வகையில் அந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது குடியுரிமை வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி உக்ரைனில் வாழும் அனைத்து மக்களுக்கும் ரஷ்யக் குடியுரிமை விரைவாக வழங்கும் ஆணையில் ரஷ்ய அதிபர் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.