Published:Updated:

``புதின் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறார்" - கனடா பிரதமர் தாக்கு

கனடா பிரதமர்

ரஷ்யா மனித உயிர்களை அலட்சியமாகக் கையாள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கனடா பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

``புதின் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறார்" - கனடா பிரதமர் தாக்கு

ரஷ்யா மனித உயிர்களை அலட்சியமாகக் கையாள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கனடா பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
கனடா பிரதமர்

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யப் படைகள் உக்ரைனின் முக்கியப் பகுதிகளை நோக்கித் தாக்குதல் நடத்தி வருகின்றன. போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது.

புதின்
புதின்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைன் போர் குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிரார். இது தொடர்பாகப் பேசிய அவர், ``ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மக்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறார். மனித உயிர்களை அலட்சியமாகக் கையாள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. புதின் இது மாதிரியான தாக்குதல்களைத் தொடர்ந்தால், உலக நாடுகள் அவருக்குத் தக்க பதிலடி கொடுக்கும். உக்ரைனில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, தங்களிடம் உள்ள அனைத்தையும் விட்டுவிட்டுச் செல்வதைக் பார்த்தால், எங்கள் இதயம் நொறுங்குகிறது. நாங்கள் கண்டிப்பாக உக்ரைன் மக்களுக்கு உதவுவோம்'' என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism