Published:Updated:

``ஃபின்லாந்து, ஸ்வீடன் நேட்டோவில் இணைந்தால் ரஷ்யாவுக்குப் பிரச்னையில்லை, ஆனால்..!"-புதின் எச்சரிக்கை

ரஷ்ய அதிபர் புதின்

ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைந்தால் ரஷ்யாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்திருக்கிறார்.

``ஃபின்லாந்து, ஸ்வீடன் நேட்டோவில் இணைந்தால் ரஷ்யாவுக்குப் பிரச்னையில்லை, ஆனால்..!"-புதின் எச்சரிக்கை

ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைந்தால் ரஷ்யாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின்பேரில், ரஷ்யப் படைகள் கடந்த பிப்ரவரி 24-ம் தேதியன்று உக்ரைனில் ராணுவத் தாக்குதலைத் தொடங்கின. உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைய முயன்றதை எதிர்த்து ரஷ்யாவால் தொடங்கப்பட்ட இந்தப் போர், இன்றுவரை முடிவுக்கு வராமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

உக்ரைனைப்போலவே ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளும் நேட்டோ அமைப்பில் சேர நீண்டகாலமாகக் கோரிக்கை வைத்துவருகின்றன. இதற்குப் பல நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், துருக்கி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.

புதின்
புதின்

இந்த நிலையில் ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் சேரப்போவதாக, கடந்த மாதம் அதிகாரபூா்வமாக அறிவித்திருந்தன. அந்த உறுப்பினர் சேர்க்கைக்கான முறையான செயல்முறை தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இரு நாடுகளின் இந்த முடிவு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரஷ்ய அதிபர் புதின், ``ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைவது குறித்து எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அது அவர்களுடைய விருப்பம். ஆனால், எங்களுக்கு எதிராக ராணுவக் கட்டமைப்புகளை நிறுவினாலோ, தொல்லை தரக்கூடிய பிரதேசங்களில் ராணுவக்குழுக்களை நிறுத்தினாலோ எங்களைத் தற்காத்துக்கொள்ள நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். எங்களுக்கு பிராந்திய வித்தியாசங்கள் கிடையாது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!