Published:Updated:

எலிசபெத் ராணியின் `கோஹினூர்' வைரம் பொருந்திய கிரீடம் யாருக்குச் செல்கிறது?

கோஹினூர் வைரம் பொருந்திய கிரீடம் ( ட்விட்டர் )

ராணியின் மறைவுக்குப் பிறகு, அவரின் கோஹினூர் வைரம் பொருந்திய கிரீடம் யாருக்குச் செல்லப்போகிறது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்திருக்கிறது.

எலிசபெத் ராணியின் `கோஹினூர்' வைரம் பொருந்திய கிரீடம் யாருக்குச் செல்கிறது?

ராணியின் மறைவுக்குப் பிறகு, அவரின் கோஹினூர் வைரம் பொருந்திய கிரீடம் யாருக்குச் செல்லப்போகிறது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்திருக்கிறது.

Published:Updated:
கோஹினூர் வைரம் பொருந்திய கிரீடம் ( ட்விட்டர் )

நீண்டகாலமாக இங்கிலாந்து ராணியாக இருந்துவந்த இரண்டாம் எலிசபெத், தன்னுடைய 96-வது வயதில் காலமானார். இரண்டாம் எலிசபெத் தன்னுடைய தந்தை கிங் ஜார்ஜ் VI-ன் மரணத்தைத் தொடர்ந்து பிப்ரவரி 6, 1952 அன்று 25 வயதில் அரியணை ஏறினார். அதன் பிறகு இளவரசர் பிலிப்பை திருமணம் செய்துகொண்டார். இவர் தன்னுடைய பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர்களை பதவி ஏற்கவைத்திருக்கிறார். இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ்ஸை நியமித்த ராணி எலிசபெத், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அவர் தம்மைச் சந்தித்தபோது வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோஹினூர் வைரம் பொருந்திய கிரீடம்
கோஹினூர் வைரம் பொருந்திய கிரீடம்
ட்விட்டர்

வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராணி இரண்டாம் எலிசபெத், பால்மாரா அரண்மனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். ராணியின் மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் இளவரசர் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராகியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, அவருடைய மனைவி கமிலா ராணியானார்.

பலவிதமான வைரங்கள் இருந்தாலும், கோஹினூர் வைரம்தான் உலகின் மதிப்புமிக்க வைரமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், ராணியின் மறைவுக்குப் பிறகு, அவரின் கோஹினூர் வைரம் பொருந்திய கிரீடம் யாருக்குச் செல்லப்போகிறது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்திருக்கிறது. இங்கிலாந்து ராணியின் கிரீடம் மிகவும் புகழ்பெற்றது.

எலிசபெத் ராணியின் `கோஹினூர்' வைரம் பொருந்திய கிரீடம்  யாருக்குச் செல்கிறது?

இந்த கிரீடத்தின் மையத்தில், 21 கிராம் எடைகொண்ட 105 காரட் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்டிருக்கிறது. கோஹினூர் வைரம் இந்தியாவுக்குச் சொந்தமானது என்றும், ஆங்கிலேயரின் படையெடுப்பின்போது இந்த வைரம் இந்தியாவிலிருந்து திருடப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

1849-ம் ஆண்டு ராணி விக்டோரியாவிடம் இது ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்த கிரீடம் லண்டன் டவரில் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதைத் தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற வைரமாகக் கருதப்படும் கோஹினூர் வைரம் பொருந்திய கிரீடம் கமிலாவிடம் செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.