Published:Updated:

Live: கணவர் உடல் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்ட ராணி எலிசபெத் உடல்!

ராணி எலிசபெத் உடல்
Live Update
ராணி எலிசபெத் உடல்

மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரியின் இறுதிச்சடங்கு லண்டனில் நடைபெற்றது!

20 Sep 2022 8 AM

கணவர் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்ட ராணி எலிசபெத்!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இம்மாத தொடக்கத்தில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட எலிசபெத் ராணி கடந்த 8 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

Live: கணவர் உடல் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்ட ராணி எலிசபெத் உடல்!
Gareth Fuller

எலிசபெத் மரணத்தை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டன் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் ராணியின் உடல் கடந்த 13-ம் தேதி லண்டன் கொண்டுவரப்பட்டது. பின்னர் லண்டனில் அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில நாள்களாக லட்சகணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பல்வேறு நாட்டின் தலைவர்களும் லண்டனில் முகாமிட்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

Live: கணவர் உடல் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்ட ராணி எலிசபெத் உடல்!
Gareth Fuller

இதனை தொடர்ந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. செயிண்ட் ஜார்ஜ் கிறிஸ்தவ தேவாலயத்தில் அரச பாரம்பரிய முறைப்படி ராணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பிரிட்டன் நேரப்படி நள்ளிரவு 7:30 மணியளவில் மன்னர் சார்லஸ் மற்றும் அரசு குடும்பத்தினர் தேவாலயத்துக்கு வருகை தந்தனர். சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள் யாரும் இன்றி குடும்பத்தினர் முன்னிலையில் எலிசபெத் உடல், மறைந்த அவரது கணவர் இளவரசர் பிலிப்பின் உடல் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

19 Sep 2022 3 PM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரியின் இறுதிச்சடங்கு லண்டனில் சற்றுமுன்பு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இறுதிச்சடங்கின் நேரடிக்காட்சியை கீழ்வரும் வீடியோவில் காணலாம்!