Published:Updated:

1986-ல் ராணி எலிசபெத் எழுதிய ரகசியக் கடிதம்; இன்னும் பிரிக்கப்படாமல் இருப்பதன் பின்னணி என்ன?!

ராணி எலிசபெத் எழுதிய ரகசியக் கடிதம்

மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றபோது எழுதிய கடிதம் அங்குள்ள ஒரு கட்டடத்தில் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது.

1986-ல் ராணி எலிசபெத் எழுதிய ரகசியக் கடிதம்; இன்னும் பிரிக்கப்படாமல் இருப்பதன் பின்னணி என்ன?!

மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றபோது எழுதிய கடிதம் அங்குள்ள ஒரு கட்டடத்தில் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
ராணி எலிசபெத் எழுதிய ரகசியக் கடிதம்

இங்கிலாந்தின் வரலாற்றில் மிக அதிக காலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத். அவர் மறைவுக்குப் பிறகு ராணி குறித்துப் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகிவருகின்றன.

அந்த வகையில், ராணி எலிசபெத் எழுதிய கடிதம் ஒன்று ஆஸ்திரேலியாவிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராணி விக்டோரியா கட்டடத்தில் ரகசியமாகப் பூட்டிவைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

எலிசபெத் எழுதிய ரகசிய கடிதம்
எலிசபெத் எழுதிய ரகசிய கடிதம்

இந்தக் கடிதத்தை அடுத்த 63 ஆண்டுகளுக்கு யாரும் படிக்கக் கூடாது என்ற உத்தரவும் கடைப்பிடிக்கப்பட்டுவருவதாகத் தெரிகிறது. அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருக்கும் தகவல்களை பொதுமக்களுக்கு எப்போது வெளிப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் ராணி தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள். மேலும், இந்தக் கடிதத்தை அவர் கடந்த 1986-ம் ஆண்டு நவம்பரில் எழுதியிருக்கிறார்.

ராணி எலிசபெத்
ராணி எலிசபெத்

சிட்னியில் உள்ள விக்டோரியா ராணி கட்டடத்தில் ஒரு பெட்டிக்குள் ராணி எலிசபெத் எழுதிய இந்தக் கடிதம் வைக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னி மேயருக்கு ராணி எலிசபெத் தன் கைப்படக் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் உள்ள உறையில், ``2085-ம் ஆண்டில் இந்தக் கடித உறையைப் பிரித்து சிட்னி நகர மக்களுக்கு நான் எழுதியதைக் கூற வேண்டும்" என எலிசபெத் வலியுறுத்தியிருக்கிறார்.

சிட்னி
சிட்னி

ராணி இரண்டாம் எலிசபெத் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் சுமார் 16 முறை ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருக்கிறார். ஆஸ்திரேலிய மக்களுடன் இவருக்கு நெருங்கிய நட்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. சிட்னி மக்கள் ராணி எலிசபெத் எழுதிய கடிதத்தைப் படிக்க ஆவலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.