Published:Updated:

ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு நிகழ்வு... பாதுகாப்புக்காக செலவு செய்யப்படும் தொகை எவ்வளவு தெரியுமா?!

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு ( ட்விட்டர் )

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்வின் பாதுகாப்புப் பணிக்காக பெரும் நிதி செலவிடப்படுகிறது என தகவல் வெளியாகியிருக்கிறது.

ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு நிகழ்வு... பாதுகாப்புக்காக செலவு செய்யப்படும் தொகை எவ்வளவு தெரியுமா?!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்வின் பாதுகாப்புப் பணிக்காக பெரும் நிதி செலவிடப்படுகிறது என தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு ( ட்விட்டர் )

இங்கிலாந்து வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்ட இவர் தன்னுடைய 96-வது வயதில் காலமானார். தனது பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்களுக்கு இங்கிலாந்து அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது உலக நாடுகளில் உள்ள தலைவர்கள், பொதுமக்கள் ராணிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எலிசபெத்!
எலிசபெத்!

இந்தநிலையில், இதுகுறித்து நியூமார்க் போஸ்ட் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், `ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கின் பாதுகாப்பு பணிக்காக செலவிடப்படும் தொகை சுமார் 7.5 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 59 கோடி) எனத் தெரிகிறது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குக்காக செலவிடப்படும் தொகை, இங்கிலாந்தின் வரலாற்றில் ஒரே நாளில் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட மிகப்பெரிய தொகையாகும். இதுவரை இங்கிலாந்து காவல்துறை மேற்கொண்ட பாதுகாப்புப் பணிகளிலேயே இது மிகப்பெரிய சவாலான பணி.

ராணி எலிசபெத்
ராணி எலிசபெத்

19ம் தேதி நடைபெறும் இறுதிச் சடங்கில் இதுவரை எதிர்ப்பார்க்காத அளவில் வெளிநாட்டுத் தலைவர்களைப் பாதுகாக்க, பிரிட்டிஷ் எம்ஐ5 மற்றும் எம்ஐ6 உளவுத்துறை நிறுவனங்கள், லண்டனின் பெருநகர காவல்துறை மற்றும் ரகசிய சேவை ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும். கடந்த 2011ல் இளவரசர் மற்றும் வேல்ஸ் இளவரசர் திருமண செலவு அதிகமாக இருந்தது. ஆனால் இந்த பாதுகாப்பு செலவை அதனுடன் ஒப்பிட முடியாது. வில்லியம் மற்றும் கேட்டின் 2011 திருமணத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தது. அந்த திருமணத்திற்கான காவல்துறை செலவுகள் 7.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது'' என குறிப்பிடப்பட்டுள்ளது.